வியாழன், 11 பிப்ரவரி, 2016

அதிமுக பேனர்கள் வைக்க சுடசுட விண்ணப்பம் சுடசுட அனுமதி

சென்னை:அ.தி.மு.க., பொதுக் குழுவுக்காக, பொதுச்செயலர் ஜெயலலிதாவை வரவேற்று, டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு, ஒரே நாளில் விண்ணப்பம் வழங்கப்பட்டு, கட்டணம் செலுத்தப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில், சென்னை மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்த மனுவில், இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
சென்னை, திருவான்மியூரில், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், 2015 டிசம்பரில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவை வரவேற்று, போயஸ் தோட்டத்தில் இருந்து,  பின்னே இன்னாங்க இத்தையும் போயி சொத்து குவிப்பு மாதிரி  இருபது வருஷமா இழுத்தடிக்கவா சொல்றீங்க


திருவான்மியூர் வரை, பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன.பொதுக் குழுவுக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக சேவகர், 'டிராபிக்' ராமசாமி, சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், பொதுக் குழுவுக்குதடை விதிக்க, உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. டிஜிட்டல் பேனர்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய, அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி, பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, 2015ல், எத்தனை பேனர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது; விண்ணப்பித்த தேதி; கட்டணம் செலுத்திய தேதி; அனுமதி வழங்கப்பட்ட தேதி போன்ற விவரங்களை தாக்கல் செய்யும்படி, தலைமைநீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதல் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

தற்போது, 2015ல், டிஜிட்டல் பேனர்களுக்கு அனுமதி அளித்த விவரங்கள், மாவட்ட கலெக்டர் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2015ல், மொத்தம், 4,484 டிஜிட்டல் பேனர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது; 11.28 லட்சம் ரூபாய், கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுக் குழுவுக்காக, டிஜிட்டல் பேனர் வைக்க, டிச., 30ல் விண்ணப்பிக்கப்பட்டு, அன்றே கட்டணம் செலுத்தி, அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் செந்தமிழ்செல்வன், அசோக், விஜயகுமார் மற்றும் வருவாய் துறை அமைச்சரின் தனி உதவியாளர் சாமிநாதன் ஆகியோர் விண்ணணப்பங்கள் அளித்துள்ளனர்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக