செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கலவரத்தில் முடிந்த ஜாட் சமூகத்தினர் போராட்டம்;ஹரியானாவில் பரபரப்பு


ஹரியானாவில் இட ஒதுக்கீடு கேட்டு ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது.
ஜாட் இன மக்கள் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள். அவர்கள் இட ஒதுக்கீடு கேடு கடந்த சில நாட்களாக ஹரியானாவில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.;பிவானி, ரோக்டக் ஆகிய நகரங்களில் அவர்கள் சாலைகளையும், ரயில் பாதைகளையும் மறித்து அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த போராட்டம் கலவரமாக மாறியது. கலவரங்களில் ஈடுபடுவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நகரம் முழுவதும் பரபரப்பானது.அவர்களை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் பலியானார்கள். மேலும் கலவரத்தை கட்டுபடுத்த ஹரியானாவிற்கு ராணுவ வீரர்களும் விரைந்தனர்.
ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்ததால், ஹரியானாவில் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. டெல்லியிலிருந்து ஹரியானா செல்லும் 700 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 104 ரயில்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. சில இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன  webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக