சனி, 6 பிப்ரவரி, 2016

சரிதா நாயர் பலாத்காரம் செய்தவர்கள் பட்டியலை தாக்கல் செய்தார்...

சோலார் விசாரணை கமிஷனில் சரிதா நாயரிடம் பலாத்காரம் செய்த
பிரமுகர்கள் பட்டியல் சோலார் விசாரணை கமிஷனில் ஆஜராகி வரும் சரிதா நாயர் தினமும் பல்வேறு அதிரடி விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். முதல்வர் உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்துறை அமைச்சர் ஆரியாடன் முகமதிற்கு ரூ.40 லட்சமும் கொடுத்ததாக தெரிவித் தார். இதையடுத்து தன்னை பலாத்காரம் செய்தவர்கள் பெயர் பட்டியலை சோலார் விசாரணை கமிஷனிடம் சீல் வைத்த கவரில் தாக்கல் செய்யப்போவதாக கூறியிருந்தார்.
இதன்படி நேற்று விசாரணை கமிஷனில் ஆஜரான அவர், தன்னை பலாத்காரம் செய்தவர்கள் பெயர் பட்டியல் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தார்.  இந்த அம்மணி  சோலார் தகடு சதுரங்க வேட்டைநடத்திவிட்டு இப்போ பலாத்கார மொத்த வியாபார பட்டியலை கொடுத்து தப்பிக்க பார்க்கிறாரோ?

அப்போது சனிக்கிழமை (இன்று) மேலும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யப் போவதாகவும் கூறினார். மேலும் கேரள போலீஸ் சங்கத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கியதற்கான ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்தார்.

போலீஸ் சங்க செயலாளர் அஜித்குமாருக்கு இந்த பணத்தை வழங்கியதாகவும் அதற்கு பிரதிபலனாக கேரளா முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சோலார் பேனல் அமைக்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்ததாகவும் சரிதா கூறினார்.

மேலும் முதல்வரின் வீட்டிற்கு 50 முறை போனில் தொடர்பு கொண்டதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார். உம்மன்சாண்டியின் முன்னாள் உதவியாளர் டென்னி ஜோப்பனின் செல்போனில் ஒரு வருடத்தில் 1000க்கு மேற்பட்ட முறை சரிதா பேசியுள்ளார்.
உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா, மின்சாரத்துறை அமைச்சர் ஆரியாடன் முகமது, சுற்றுலாத்துறை அமைச்சர் அனில்குமார், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விஷ்ணுநாத், ஹைபி ஈடன், அப்துல்லா குட்டி மற்றும் முன்னாள் அமைச்சர் மோன்ஸ் ஜோசப், காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான வேணுகோபால் ஆகியோருக்கு எத்தனை முறை போனில் பேசினார் என்பது குறித்த விவரங்களையும் தாக்கல் செய்தார்.  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக