திங்கள், 15 பிப்ரவரி, 2016

எனது பெயரை பயன்படுத்துவதா? அழகிரிக்கு கலைஞர் கண்டனம்....

சென்னை: தனது பேட்டிகளில் எனது பெயரை அழகிரி பயன்படுத்துவது
கண்டிக்கத்தக்கது என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அழகிரி தெரிவித்து வரும் கருத்துக்களை திமுகவினர் பொருட்படுத்த தேவையில்லை. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அழகிரி கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அழகிரிக்கும் தி.மு.க.,விற்கும் இடையே எந்தவித தொடர்பும் கிடையாது. திமுக காங்., கூட்டணி குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
அவர் செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரை பயன்படுத்தவது கண்டிக்கத்தக்கது. தி.மு.க.,வினர் யாரும் அழகிரி தெரிவித்து வரும் கருத்துக்களை பொருட்படுத்த தேவையில்லை. அழகிரியின் கருத்துக்களை அலட்சியப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். முன்னதாக, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தோல்வியடையும் கூட்டணி என அழகிரி கூறியிருந்தார் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக