திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஒப்புதல் வாக்குமூலம்: திமுக–காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை நீடிப்பது சந்தேகம்: பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக – காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை நீடிப்பது சந்தேகம் என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.  தேமுதிக மாநாட்டில் விஜயகாந்தை ‘கிங்’ ஆக்க வேண்டும் என்று அக்கட்சித் தொண்டர்கள் கூறியுள்ளனர். இதற்கு நாங்கள் கவலைப்படவில்லை. ஏனென்றால் தேமுதிக எங்கள் கூட்டணியில்தான் உள்ளது. முதல்வர் வேட்பாளரை அறிவித்த கட்சிகள்தான் இதற்காக கவலைப்பட வேண்டும். சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகியுள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் மண்டபத்தில் ஞாயிறன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பாஜக கடந்த மக்களவை தேர்தலைப் போலவே வலுவான கூட்டணியை அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும்.

பாஜக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படுவதை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும். திமுக – காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்பது சந்தேகமே//tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக