வியாழன், 25 பிப்ரவரி, 2016

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து..சிவகாசி அருகே: பல அறைகள் தரைமட்டம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பட்டாசு வைத்திருந்த அறைகள் தரைமட்டமாகியிருப்பதால் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிவகாசி அருகே நாரணபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஆலையின் ஒரு பகுதியில் பட்டாசு திடீரென வெடித்துள்ளது. அதில் இருந்து வெளியான நெருப்பு பட்டு, அனைத்து பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. அக்கம் பக்கத்தில் உள்ள அறைகளுக்கும் நெருப்பு பரவியதால் பட்டாசுகள் வெடித்து சுவர்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். இதனால், உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக