ஜெயலலிதாவின்
தோழி சசிகலா இன்று (வியாழன்) காலை 11.45 மணி அளவில் பழனி முருகன்
கோவிலுக்கு மதுரையில் இருந்து கார் மூலம் வந்தார். அடிவாரத்தில் இருந்து
வின்ச் மூலம் மலைக்கு வந்த அவர், மதியம் 12 மணிக்கு நடக்கும் உச்சிகால
பூஜையில் கலந்து கொண்டு முருகனை வழிபட்டார். அரை மணி நேரம் கோவிலில் இருந்த
அவர் 12.30 மணி அளவில் மதுரை புறப்பட்டார்.முன்னதாக
அவர் வரும் செய்தி அறிந்து கோயில் அதிகாரிகள், ரோப் காரை தயார் நிலையில்
வைத்திருந்தனர். ஆனால் அவர் வின்ச்சில் ஏறி சென்றார். சசிகலா வருவதையொட்டி
கோயிலில் பாதுகாப்பு பணிகளும், அவர் விரைவாக தரிசனம் செய்யக்கூடிய
வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக