திங்கள், 15 பிப்ரவரி, 2016

தா மா கா The End....திமுக விரட்டி விட்டது...அதிமுக காலை வாருகிறது... முற்பகல் லீலை விளைகிறது பாரீர்....

காங்கிரசுடன் கைகோர்த்து தி.மு.க., கதவை சாத்தியதாலும்; ஒற்றை இலக்கத்தில் தான் 'சீட்' தர முடியும் என அ.தி.மு.க., காலை வாருவதாலும்; என்ன செய்வது என புரியாமல் தவித்து வருகிறார் த.மா.கா., தலைவர் வாசன். அதே நேரத்தில் மக்கள் நலக் கூட்டணிக்கு வரும்படி, அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, வாசனை ரகசியமாக சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் என்ற பரபரப்பு தகவலும் வெளியாகி உள்ளது.காங்கிரசில் இருந்து வாசன் வெளியேறிய போது அக்கட்சியில் இருந்த பலரும் அவரோடு வெளியேறினர். 'தனிக்கட்சி துவங்கும் போது, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமையலாம்' என்ற உறுதியான தகவல் பரவியதும் அதற்கு காரணம்.அதற்கு தகுந்தாற்போல வாசனும், ஆளுங்கட்சியை எந்த விதத்திலும் ஆத்திரத்துக்கு உள்ளாக்காமல் அரசியல் செய்து வந்தார்; என்கதை முடியும் நேரம் இது என்பதை சொல்லும் ராகம் இது பதவியில் வாழும் உள்ளம் இது
மென்மையான முறையிலேயே அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டதால் கூட்டணி குறித்தும் 'சீட்' ஒதுக்கீடு பற்றியும் அ.தி.மு.க.,விடம் கேட்கப்பட்டது. கூட்டணியில் இணைத்துக்கொள்ள விருப்பப்பட்ட அ.தி.மு.க., மேலிடம் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே 'சீட்' தர முடியும் என்று சொன்னதும் வாசன் உட்பட தமிழ் மாநில காங்கிரசின் மூத்த தலைவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.உடனே மனம் மாறி 'தி.மு.க.,விடம் இருந்து அழைப்பு வரும்; காத்திருக்கலாம்' என எண்ணியிருந்தனர்.

ஆனால் தி.மு.க.,வோ, காங்கிரசை அழைத்துப் பேசி கூட்டணியை அறிவித்து விட்டது. இதனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பமும் தவிப்பும் வாசனுக்கு ஏற்பட்டுள்ளது.
வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஏற்கனவே வாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அதை ஏற்பது குறித்த பரிசீலனை கட்சிக்குள் நடந்து வருகிறது. அதேநேரத்தில் ஒரு சிலர் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று காலை சென்னையில் உள்ள வாசன் வீட்டுக்கு தனியாக வந்தார் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ. வழக்கம் போல தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்தவர் 50 'சீட்' வரை, த.மா.கா.,வுக்கு கொடுக்க தயாராக உள்ளதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து த.மா.கா., வட்டாரங்கள் கூறியதாவது:
* தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பிரதான
கட்சிகளின் கூட்டணி இல்லாததால் வாசன் கடும் அதிருப்தியில் உள்ளார். இருந்தாலும் மக்கள் நலக் கூட்டணி சார்பில் வாசனை சந்தித்த வைகோ, 50 'சீட்' வரை உறுதி செய்தார். இதனால் வாசன் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளார்; ஆனாலும் வெற்றி வாய்ப்பு குறித்து அச்சப்படுகிறார்.
* பா.ஜ., தரப்பில் இருந்தும் வாசனுக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் பா.ஜ.,வை எதிர்த்து கட்சி ஆரம்பித்து விட்டு அவர்களோடு எப்படி செல்வது என வாசன் யோசனை செய்கிறார்.
* ஒரு சிலர் 'வெற்றி, தோல்வி பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த முறை கட்சி தனித்தே போட்டியிட வேண்டும்' என வலியுறுத்துகின்றனர். இப்படி மூன்று விதமான கருத்துக்கள் உள்ளதால் வாசன் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
சிறிய காரில் ரகசிய பயணம்!
வழக்கமாக 'பஜிரோ' ரக காரில் தான் ம.தி.மு.க., பொதுச் செயலரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ செல்வார். ஆனால் தற்போது பல அரசியல் கட்சித் தலைவர்களை ரகசியமாக சந்திக்க வேண்டும் என்பதால் மகன் வையாபுரியின் சிறிய ரக காரில் யாருக்கும் தெரியாமல் செல்கிறார். நேற்று காலை வாசன் வீட்டுக்கும் சிறிய காரில் தான் சென்றுள்ளார்.
- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக