வியாழன், 11 பிப்ரவரி, 2016

மோடியின் கைவிடப்பட்ட மனைவி யசோதா பென் பாஸ்போர்ட் விபரங்களை கேட்கிறார்.

பிரதமர் மோடியின் பாஸ்போர்ட் குறித்த விபரங்களை அளிக்குமாறு அவரது
மனைவி யசோதா பென் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பத்துள்ளார். பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் திருமணச் சான்றிதழ் இணைக்கப்படவில்லை எனக் கூறி அந்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்துள்ள யசோதாபென், மோடி முதன் முறையாக பெற்ற பாஸ்போர்ட், புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட், குஜராத் முதலமைச்சராக பதவியேற்ற பின் பயன்படுத்திய பாஸ்போர்ட் ஆகியவற்றின் விபரங்களையும் அதன் பிரதிகளையும் தனக்கு அளிக்குமாறு அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்கட்டிய பெண்ட்டாட்டிய கைகழுவி விட்டவர் நாட்டை காப்பாராம் நம்பலாம் 
.

பிரதமரின் மனைவி என்கிற முறையில் தனக்கு உள்ள பாதுகாப்பு உரிமைகள் என்ன எனக் கேட்டு யசோதாபென் ஏற்கனவே தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆர்டிஐ மனுவை யசோதா பென் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. /ns7.tv/section

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக