புதன், 3 பிப்ரவரி, 2016

அழகிரிக்கு 'நோ என்ட்ரி' ஸ்டாலின் கதவடைப்பு...

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, 2014ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சிக்கு விரோதமான செயல்களில், அவர் இறங்கியதாக குற்றஞ்சாட்டிய கருணாநிதி, 'இனி, அவர் எனக்கு மகனே கிடையாது' என்றும், ஆவேசமாக அறிவித்தார்.
அதன்பின், பலமுறை சென்னைக்கு வந்த அழகிரி, விமான நிலையத்தில், தி.மு.க.,வுக்கு எதிராகவும், குறிப்பாக, ஸ்டாலினுக்கு எதிராகவும் கருத்து கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார்.    எவ்வளவு கஷ்டப்பட்டு, அழகிரியை கோபப்படுத்தி, கடுப்பேத்தி கட்சியை விட்டு வெளியேத்திருக்கார் ஸ்டாலின். அவ்வளவு சுலபமா கட்சிக்குள் மீண்டும் வரவிடுவாரா என்ன? கட்சி வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தைவிட கட்சியில் தான் நெம்பர் 1-ஆக இருக்கவேண்டும் என்பதே கொள்கையாக இருக்கிறது. சுப்ரமணியம் சுவாமியும் இது தெரிந்துதான் ஸ்டாலினை முன்னே நிறுத்தி திமுகவை அடிக்க நினைக்கிறார்.
ஆனால், கடந்த சில மாதங்களாக, கட்சிக்கு எதிராக எந்தக் கருத்தும் கூறாமல் அமைதி காத்தார். அதனால், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க, கருணாநிதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஜன., 30ம் தேதி, தன் பிறந்த நாளையொட்டி, சென்னை வந்த அழகிரி, கோபாலபுரம் சென்று கருணாநிதி, தயாளுவை சந்தித்து ஆசி பெறுவார்; அப்படியே, கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார் என, செய்திகள் பரவின. இருந்தும், எதிர்பார்த்தபடி, அன்று எந்தச் சந்திப்பும் நடைபெறவில்லை. கருணாநிதி, தயாளுவை சந்திக்க, அழகிரி திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடைசி
நேரத்தில், சந்திப்பை ரத்து செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில்,சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் நேற்று, 'நமக்கு நாமே' நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலினிடம், 'தி.மு.க.,வில், அழகிரி மீண்டும் இணைய போகிறார் என்ற செய்தி உலா வருகிறது. அவர், மீண்டும் தி.மு.க.,வில் சேர்த்து கொள்ளப்படுவாரா?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், 'அந்த செய்தி வதந்தி. அவர், கட்சியில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே நீக்கப்பட்டு விட்டார். அதுகுறித்து, இப்போது ஏதும் பேச தேவையில்லை' என, திட்ட வட்டமாக தெரிவித்து விட்டார். இதன் மூலம், அழகிரி கட்சியில் மீண்டும் இணைவதை, ஸ்டாலின் விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது.

மொபைல் போனில் 'பிசி' வியாபாரிகள் அதிருப்தி:
'நமக்கு நாமே'நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக நேற்று, தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுடனான கலந்துரையாடலில், ஸ்டாலின் பங்கேற்றார். இதில், 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர். அதன் பிரதிநிதிகள் தங்கள் குறைகளை கூறினர். அப்போது, ஸ்டாலின் அவர்களை கவனிக்காமல், கால் மணி நேரம் தன் மொபைல் போனில், ஆர்வமாக டைப் செய்தபடியே இருந்தார். இதனால், சங்கத்தின் பிரதிநிதிகள், 'நம்மை பேச சொல்லிவிட்டு, மொபைல் போனை பார்த்துக் கொண்டிருக்கிறாரே' என, தங்களுக்குள் புலம்பினர்   தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக