பெரும் படங்களை விட இப்போது குறும்படங்கள் அதிக கவனத்தை ஈர்க்க
ஆரம்பித்துவிட்டன.
முன்பெல்லாம் குறும்படங்களைப் பார்க்க வைப்பதே கடினம். இப்போதே கட்டணச்
சீட்டு வாங்கி தியேட்டர் நிரம்பி வழிய காத்திருந்து குறும்படங்கள்
பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.
Buy Tickets
BAFA Tamil short film festival
கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த விரிகுடா
கலைக் கூடத்தின் முதல் குறும்பட விழாவில் இதனை நேரில் காணும் வாய்ப்புக்
கிடைத்தது (Bay Area Fine Arts - BAFA).
BAFA Tamil short film festival
முதல் முறையாக சற்று அதிக பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட முதல்
தமிழ் குறும்பட விழாவும் இதுவே. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் திட்டமிட்டு
நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்திலிருந்து
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், மும்பையிலிருந்து மரியான் புகழ் பரத் பாலா
மற்றும் நடிகர் - தயாரிப்பாளர் நெப்போலியன் ஆகியோர் பங்கேற்றனர்.
BAFA Tamil short film festival
முதல் இரு சுற்றுகளில் வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வான 6 குறும்படங்கள்
இந்த விழாவில் திரையிடப்பட்டன.
அவை..
இறுதி வரை, விதி, இளஞ்சிவப்பு, கருவிழி கருவி, சுபதன் மற்றும் நவம்.
இந்த ஆறு படங்களையும் நடுவர்களாக வந்திருந்த கார்த்திக் சுப்பராஜ்,
பரத்பாலா மற்றும் நெப்போலியனுக்கு அன்றைக்குதான் நுதல் முறை காட்டினார்கள்.
படம் பார்த்து முடித்ததும் அந்த இடத்திலேயே தங்களின் முடிவைச் சொல்லி
விருதுகளையும் அறிவித்தனர் நடுவர்கள்.
BAFA Tamil short film festival
ஆர்வத்தோடு பங்கேற்ற இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே, இறுதிப்
போட்டிக்கு தேர்வாகாவிட்டாலும், அதற்கு முந்தைய சுற்றுக்குத் தேர்வான சில
படங்களின் கலைஞர்களுக்கும் விருது வழங்கினர்.
விருது பெற்ற குறும்படங்கள் மற்றும் கலைஞர்கள்...
1. சிறந்த வசனம் - கமல் தாஸ் பிரேம் மற்றும் ராஜி (விதி)
2. சிறந்த ஒளிப்பதிவு - ஈஸ்வரன் பாஸ்கரன், அஸ்வின் ராதாகிருஷ்ணன் (இறுதி
வரை)
3. சிறந்த துணை நடிகர்- செஷாங்க் கல்வல (வேலை எவனிடம்)
4. சிறந்த துணை நடிகை - தியா மோடி (நவம்)
5. சிறந்த ஆர்ட் டைரக்ஷன் - அருண் கல்யாண் நாகராஜன், மோகன் ப்ரியா,
ஐஸ்வர்யா பிரதீப், ப்ரியதர்ஷினி சந்திரசேகரன், ராகவன் கேஎல், ஸ்ரீராம்
ஸ்ரீதர் (நவம்)
6. சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசங்கர் (நிழல்)
7. சிறந்த எடிட்டர்: கே ஆர் சீனி, மோகன் சுப்ரமணியன் (சுழற்சி)
8. சிறந்த நடிகர் - செஷாங்க் கல்வல (இறுதி வரை)
9. சிறந்த நடிகை- ரம்யா விஜயன் (இறுதி வரை)
10. சிறந்த தொழில் நுட்பம் - அரின் க்ரிம்லி (சுபதன்)
11. பாஃபா நடுவர் குழு விருது- குகன் வைத்தியலிங்கம் (சுபதன்)
12. சிறந்த படம் - நவம் (விவேக் இளங்கோவன்)
13. சிறந்த இயக்குநர் - அஞ்சலி பத்மநாபன்
BAFA Tamil short film festival
விழா நடந்த சான் பிரான்சிஸ்கோ குப்பெர்டினோ டெ அன்சா கல்லூரி (De Anza
College) அரங்கம் பார்வையாளர்கள் வருகையால் நிரம்பி வழிந்தது.
BAFA Tamil short film festival
விழா ஏற்பாடுகளை திருமுடி துளசிராமன் செய்திருந்தார்.
-சான் பிரான்சிஸ்கோவிலிருந்து, எஸ் ஷங்கர்
//tamil.filmibeat.com
//tamil.filmibeat.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக