ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மீண்டும் அழகிரி திமுகவில்....நீண்ட ஓய்வுக்கு பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கும், முன்னாள் அமைச்சர் அழகிரிக்கும்
சகோதர யுத்தம் மீண்டும் போஸ்டர் சீண்டல்கள் மூலம் துவங்கியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., தென்மண்டல பொறுப்பாளருமான மு.க.அழகிரியின் பிறந்தநாளுக்கு அவரது ஆதரவாளர்கள் அடித்த போட்டி பொதுக்குழு போஸ்டர் விவகாரத்தால், அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து கட்சியையும், தன் சகோதரரும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினையும் அவர் விமர்சித்து வந்ததால், தி.மு.க.,வுக்கும், அவருக்கும் இடைவெளி அதிகரித்தது. அதிரடி அரசியல்: தி.மு.க.,வில் கட்சித் தலைவர் கருணாநிதியையும் மீறி அழகிரி கோஷ்டி, ஸ்டாலின் கோஷ்டி என்று உள்ளது என்பது இந்த மோதல் மூலம் அனைவரும் தெரிந்தது. தி.மு.க.,வை விட்டு நீக்கப்பட்ட அழகிரி, தி.மு.க., தலைவர் கருணாநிதியைத் தவிர மற்ற யாரையும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஸ்டாலினை மறைமுகமாக சாடி அறிக்கைகள் வெளியிட்டும், பேட்டிகள் கொடுத்தும், அதிரடி அரசியலில் ஈடுபட்டார்.


பின்னர் 2014ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வில் ஸ்டாலின் ஆதிக்கம் நிறைந்திருந்ததால், அழகிரி தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்று பகிரங்கமாக பேசினார். இப்படியாக தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அழகிரி கடந்த ஓர் ஆண்டாக அரசியல் பற்றி அதிகம் பேசாமல் ஒதுங்கியிருந்தார். இதனால் அவர் மீண்டும் தி.மு.க.,வில் விரைவில் சேர்ந்து விடுவார் என்று அனைவரும் நம்பினர். தேர்தல் வரும் நேரத்தில்...
அந்த போஸ்டரில், 'முடியட்டும் சர்வாதிகாரம், விடியட்டும் 2016ல் சனநாயகம்' என்று அச்சிட்டு, அதில் தி.மு.க., தலைவர் கருணாநிதி, அழகிரி, அழகிரியின் தீவிர ஆதரவாளர் மன்னன் மற்றும் போஸ்டர் அடித்தவர்களின் படங்கள் பெயர்களுடன் இடம் பெற்றிருந்தது. சட்டசபை தேர்தல் வரும் நேரத்தில் மீண்டும் தி.மு.க.,வில் சகோதரயுத்தம் அழகிரி ஆதரவாளர்கள் மூலம் போஸ்டர் யுத்தமாக துவங்கியுள்ளது, கட்சித் தலைமையையும், தி.மு.க.,வினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக