புதன், 6 ஜனவரி, 2016

இந்துவாக இருந்து முஸ்லிம் ஜிகாதியாக மாறியவன் அடையாளம் காணப்பட்டான்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் மற்றொரு ‘ஜிகாதி ஜான்’ உருவாகியிருக்கிறான். அவன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் இங்கிலாந்து ராணுவத்துக்கு உளவாளியாக இருந்த 5 பிணைக்கைதிகளை முகமூடி அணிந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சி இடம் பெற்றிருந்தது. பிணைக் கைதியை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவன் ஜிகாதி ஜான்–2 என அழைக்கப்பட்டான். அவன் இங்கிலாந்தை சேர்ந்தவன் என தெரிய வந்துள்ளது. அவனது பெயர் அபு ருமாசயா (32). இவனது உண்மையான பெயர் சித்தார்த்த தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவன் பிறப்பால் இந்து. பின்னர் இவன் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஆயிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். ஆயிஷா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவள். எனவே, அவனும் தீவிரவாதியாக மாறினான். லண்டனில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்தான். வீடியோவில் வெளியான குரலை வைத்து அவன் சித்தார்த்த தார் தான் என தாயாரும், சகோதரியும் தெரிவித்தனர். இதை இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.


ஜிகாதி ஜான்–2 என அழைக்கப்படும் அபு ருமாசயா இங்கிலாந்தில் கடந்த 2014–ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டான். அப்போது தனது மனைவி ஆயிஷாவுடன் சிரியாவுக்கு தப்பி ஓடிவிட்டான்.

இதற்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் முகமது எம்வாசி (27) என்ற இங்கிலாந்துக்காரர் ‘ஜிகாதி ஜான்’ என அழைக்கப்பட்டான். கடந்த ஆண்டு நவம்பர் 12–ந்தேதி சிரியாவின் அல்–ரக்காவில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய குண்டு வீச்சில் கொல்லப்பட்டான்.  மாலைமலர்.com


இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் அண்மைய பிரச்சார வீடியோவில் தோன்றிய முக்கிய சந்தேக நபர், இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறிய பிரிட்டிஷ்காரர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரிட்டனுக்காக உளவுபார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, கொலை செய்யப்பட்ட ஐந்து பேர் பற்றிய இஸ்லாமிய அரசின் அண்மைய பிரச்சார வீடியோ குறித்த புலனாய்வின் மையமாக இந்த சித்தார்த்தா தார் மாறியுள்ளார்.bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக