சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மஹசென் நகரில்
இருக்கும் இமாம்
ரிடா ஷியா பிரிவு மசூதிக்கு இன்று மதியம் ஜும்மா தொழுகையில் பங்கேற்க பலர்
வந்துள்ளனர். அப்போது மசூதியில் மனிதகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த
சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. 10 பேர் படுகாயம்
அடைந்து உள்ளனர்.
மசூதியில் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூடு
சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மசூதியில் குண்டு வெடித்தது,
துப்பாக்கிச்சூடு நடந்தது தொடர்பான வீடியோக்கள் டுவிட்டரில்
வெளியிடப்பட்டுள்ளன.dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக