வியாழன், 7 ஜனவரி, 2016

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வெற்றியை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியதில் ஒருவர் மரணம்

ஆப்கன் தேசியக் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு எதிராக பெற்ற டெஸ்ட் போட்டித் தொடர் வெற்றியைக் கொண்டாடிய சிலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பதின்பருவ இளைஞர் கொல்லப்பட்டார்.ஆப்கானிஸ்தானின் தெற்கே நடந்த இந்த சம்பவத்தைத் தவிர, தலைநகர் காபூலில் நடந்த வேறொரு சம்பவத்தில் வேறு பலர் காயமடைந்தனர். ஷார்ஜாவில் நடந்த ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான ஐந்து டெஸ்ட் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் வென்றதை அடுத்து, ஆப்கான் ரசிகர்கள் பல இடங்களில் வீதிகளில் ஆடியும், வானில் துப்பாக்கியால் சுட்டும் கொண்டாடினர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்கள் வெளி வந்திருக்கின்றன.
இந்த சம்பவம் தனக்கு ஒரே ஒன்றைத்தான் - அதாவது போரைத்தான் - நினைவூட்டுவதாக ஒரு பெண் டிவிட்டரில் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்த இது ஒரு மோசமான வழி என்று ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளியுறவு துணை அமைச்சர் ஒருவர் கூறினார்  bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக