ஞாயிறு, 31 ஜனவரி, 2016

தற்கொலைப்படை தாக்குதல் நடத்த மும்பை பெண்களுக்கு ஆன்லைன் மூலம் ஐஎஸ் தலைவர் பயிற்சி

மும்பை: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த மும்பையைச் சேர்ந்த வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. 'ISIS leader Abu Bakr al-Baghdadi training Mumbai girls for suicide bombings through online classes' விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறியிருப்பதாவது, ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பையைச் சேர்ந்த வாலிபர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்த ஆன்லைன் பயிற்சியில் இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த வாலிபர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் மும்பையைச் சேர்ந்த இளம் பெண்களும் பாக்தாதியின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக