ஞாயிறு, 10 ஜனவரி, 2016

சரத்குமார்: அ.தி.மு.க. கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கிறது...டிக்கெட் கொடுப்பாங்கல?

‘ஜெயலலிதா மீது மக்கள் கொண்ட நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது’
என்றும் ‘அ.தி.மு.க. கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கிறது’ என்றும் சரத்குமார் கூறினார்.
சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனர்–தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  நடிகர்களை வித்து கிடைச்சது எவ்வளவுன்னு அவுக இன்னும் கணக்கு பார்க்கிறாய்ங்க...அப்புறம்   நாடார்களை வித்து எதனாச்சும் கிடைச்சுதா?  இரண்டு கணக்கையும் ஒழுங்கா காட்டுங்க? 

சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர், மாவட்ட செயலாளர்கள் சென்னை சி.ராஜா, எம்.ஏ.கிச்சாரமேஷ் உள்ளிட்ட 61 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, செயல்வீரர்கள் கூட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
அ.தி.மு.க. கூட்டணி கேள்வி:– ஜல்லிக்கட்டு நடைபெறுவதை காட்டுமிராண்டித்தனம் என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெயராம் ரமேஷ் கூறியிருக்கிறாரே?
பதில்:– இது முட்டாள்தனமான பேச்சு. அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அவர்மீது, சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜல்லிக்கட்டு என் குடும்பத்தோடு கலந்த ஒன்று. அதை வெளிப்படுத்தும் வகையில் வருகிற 16–ந்தேதி பாலமேட்டிலும், 17–ந்தேதி சிராவயலிலும் நடக்கும் ஜல்லிக்கட்டில் நான் கலந்துகொள்வேன்.
கேள்வி:– அ.தி.மு.க. கூட்டணியில் நீங்கள் தொடர்ந்து நீடிப்பீர்களா?
பதில்:– அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் இன்றும் நீடிக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது வரை எந்தவித தீர்க்கமான முடிவும் நாங்கள் எடுக்கவில்லை.
புதிதாக நான் எதற்கு? கேள்வி:– தேர்தல் நெருங்கும் வேளையில் பிற கட்சிகளில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா?
பதில்:– யாரும் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை.
கேள்வி:– அ.தி.மு.க.வை தோற்கடிக்க போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சூளுரைத்திருக்கிறாரே?
பதில்:– தேர்தலின்போது கூட்டணியில் இடம் கொடுத்து எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை கொடுத்ததே அ.தி.மு.க. தான். அவருக்கு முன்பிருந்த 8 சதவீத ஓட்டுகளும் தற்போது இருக்குமா? என்று கூட தெரியவில்லை. அ.தி.மு.க. மூலம் மதிப்பு பெற்று, இன்று அவர் புதிய சபதம் எடுத்து வருகிறார். இதுகுறித்து நான் எதுவும் கூறவிரும்பவில்லை.
வெற்றிக்கூட்டணி கேள்வி:– சட்டமன்ற தேர்தலில் ச.ம.க. எந்த திசையில் பயணிக்கும்?
பதில்:– தேர்தலில் எல்லாவிதமான முடிவுகளையும் எடுக்க எனக்கு கட்சியினர் முழு அதிகாரம் வழங்கி இருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் நாங்கள் வெற்றிக்கூட்டணியில் இடம் பெற்று இருப்போம்.
கேள்வி:– அ.தி.மு.க.வின் 4½ ஆண்டு ஆட்சியை பெரும்பாலான கட்சிகள் விமர்சித்து வருகிறதே?
பதில்:– அது முற்றிலும் தவறு. அ.தி.மு.க.வின் செயல்பாடு நன்றாக இருப்பதால் தான் நாங்கள் அந்த கூட்டணியில் இருக்கிறோம். விமர்சனங்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஜெயலலிதா மீது மக்களுக்கு உண்டான நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது. அ.தி.மு.க.வின் ஆட்சி எப்படி இருந்தது? என்பதற்கான பதில் தேர்தலில் தெரியும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
தீர்மானங்கள் முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:–
* தமிழகத்தில் முதல்–அமைச்சரின் கோரிக்கையை ஏற்று மழை நிவாரண நிதியை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும்.
* நெல்லையில் கெனடியான் கால்வாய்த்திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை பெருக்கி விரைந்து அத்திட்டத்தை முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
* உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விமானநிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
* காவிரியின் குறுக்கே அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கும், முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணைக்கட்ட முயற்சிக்கும் கேரளா அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
* சென்னை–கன்னியாகுமரி இடையே இரட்டை ரெயில் பாதையை நிறைவு செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவை உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக