வெள்ளி, 15 ஜனவரி, 2016

வைகோ : தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி...

மதுரை ஒத்தக்கடை நான்குவழிச் சாலையில் மக்கள் நலக் கூட்டணி மாநாடு நடைபெற உள்ள இடத்தைப் பார்வையிடும் மதிமுக பொதுச் செயலர் வைகோ மற்றும் நிர்வாகிகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி. மதுரை ஒத்தக்கடை நான்குவழிச் சாலையில் மக்கள் நலக் கூட்டணி மாநாடு நடைபெற உள்ள இடத்தைப் பார்வையிடும் மதிமுக பொதுச் செயலர் வைகோ மற்றும் நிர்வாகிகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்கள் நலக் கூட்டணி தமிழக அரசியலில் பிரமிக்கத்தக்க மகத் தான திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது.
மாற்று அரசியல் எழுச்சிக்கான மக்கள் நலக் கூட்டணி மாநாடு மதுரையில் ஜன. 26-ம் தேதி நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுக ஆகியன இணைந்து நடத்தக்கூடிய இந்த மாநாடு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தும்.
ஊழல் இல்லாத ஆட்சி, மதுவை ஒழிக்கிற ஆட்சி, லஞ்சமில்லாத வெளிப்படையான கூட்டணி ஆட்சியை இக்கூட்டணி ஏற்படுத்தும். இதுவரை தொகுதி உடன்பாடுகளுக்காகத்தான் கூட்டணிகள் ஏற்படுத்தப்பட்டன. முதல்முறையாக கொள்கைக்காக குறைந்தபட்ச செயல் திட்டம் அமைத்து இக்கூட்டணியை அமைத்துள்ளோம்.
கடந்த சில மாதங்களாக இணைந்து போராட்டங்கள், வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட நெருக்கம், பரஸ்பர புரிதல், நேசம் ஆகியன இதுவரை அமைந்த எந்த ஒரு கூட்டணியிலும் காணப்பட்டதில்லை. இந்த மாநாடு கண்டிப்பாக ஊழல் ஆட்சியை அகற்றும். இந்த மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையையும், மவுனப் புரட்சியையும் ஏற்படுத்தும். இந்த மாநாடு முடிந்தவுடன் மக்களை சந்திக்கவுள்ளோம். கடந்த 1967-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம், ஒரு கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
ஜன. 17-ல் உண்ணாவிரதம்
ஜல்லிக்கட்டு தடையால் தமிழர் கள் மனக்காயம் பட்டுள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடக்கும் நாளான ஜன. 17-ம் தேதி மக்கள் நலக் கூட்டணி சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில் உண்ணாவிரதம் நடைபெறும். கூட்டணியில் உள்ள 4 தலைவர்களும் இதில் கலந்துகொள்கின்றனர் என்றார்.//tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக