சனி, 9 ஜனவரி, 2016

சமணர்கள்தான் சைவ உணவை உண்டனர்...பார்பனர்கள் வேதகாலத்தில் மாமிசம்தான் உண்டனர்...மாடு குதிரை...

இந்த உலகில் எப்படி மனிதர்களுக்கு வாழும் உரிமை இருக்கிறதோ அதே
போலதான் சகல ஜீவராசிகளுக்கும் வாழும் உரிமையை இந்த உலகம் பாரபட்சம் இல்லாமல் வழங்கி இருக்கிறது.  ஏனோ தெரியவில்லை பகுத்தறிவாளர்களும் சுயமரியாதையாளர்களும் மாட்டுக்கறி சாப்பிடுவதை ஏதோ ஒரு பகுத்தறிவு போராட்டமாக எண்ணி விருப்பம் இல்லாவிடினும் பிரசாரதிற்காக உண்ணுகிறார்கள். இதற்கும் கூட பார்ப்பனர்களின் ஜாதி துவேஷ கொள்கைதான் ஒரு விதத்தில் காரணமாக அமைந்துவிட்டது. பார்பனீயத்தின் மனித குல விரோத கொடுமையான ஜாதி வேறுபாட்டையும் அதன் ஒடுக்குமுறையையும் எந்த வழியில் ஆவது இல்லாமல் செய்யவேண்டும் என்ற கோபத்தில் மாட்டு இறைச்சி போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் போலும்.  வேதகாலத்தில் பார்பனர்கள் சகல ஜீவராசிகளையும் கொன்று நெருப்பில் வாட்டி உண்டவர்கள்தான். சமுகத்தில் தீட்டு வியாதியை பரப்ப அவர்கள் திடீரென்று சமணர்களின் கொல்லாமையை ஏற்று கொண்டு மாமிசம் உண்ணுவதை நிறுத்தினார்கள்.  இன்று தாங்கள்தான் பசுக்களை பாதுக்கப்பதாக வேஷம் போடுகிறார்கள்.www.prearyan.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக