ஞாயிறு, 24 ஜனவரி, 2016

வைகோ :மதிமுகவை அழிக்க நினைத்தால் தோல்விதான் கிடைக்கும்...

மதிமுகவை அழிக்க நினைப்பவர் களுக்கு தோல்விதான் கிடைக்கும்’’ என
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
தொண்டர்களின் தியாகத்தால் 22 ஆண்டுகளாக மதிமுக வீறு நடை போட்டு வருகிறது. ஊழல்வாதிகளின் கையில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. 22 ஆண்டுகளாக தங்களது சொந்த பணத்தை செலவு செய்து மதிமுகவை காவல் தெய்வங்களாக காத்து வருகிறீர்கள்.  அழிக்க விடமாட்டேன் நானே படைத்தல் காத்தல் அழிப்பேன் எல்லாம் பண்ணுவேன் என்று இந்த அழிச்சாட்டியம் பண்ணிறாரே? சீக்கிரம் பண்ணி தொலையுங்க... 

மக்கள் கவனம் நம் மீது திரும்பி யுள்ளது. மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும், என்ற எண்ணம் நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் வியக்கும் அளவுக்கு மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெறப்போகிறது. நான் தொடங்கின கட்சி யாரையும்
சிறு குறு தொழில் முனைவோர் அன்னிய முதலீட்டால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர். மதுவின் கொடுமையால் லட்சக்கணக்கான தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான திமுக, அதிமுக, ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் மக்களிடம் உருவாகி யுள்ளது.
மதிமுகவின் கூடாரம் காலியாகிவிட்டது என, செய்தி வெளியிட்டு வருகின்றனர். 20 ஆண்டுகளாக கொள்கையில் உறுதியாக உள்ளோம், என்பதை உணர்த்தியுள்ளீர்கள். திமுகவில் ஆட்களே இல்லையா? மதிமுகவில் இருந்து சப்ளை செய்துதான் கட்சியை வளர்க்க வேண்டுமா?
கஷ்டப்பட்டு இயக்கம் நடத்தும் எங்கள் கட்சி நிர்வாகிகளிடம், அதையும், இதையும் தருகிறோம் எனச் சொல்லி இழுக்கிறீர்கள். இதுதான் திமுகவின் பண்பாடா? கேவலமாக நடந்து கொள்கிறீர்கள்.
மது விலக்குக்காக திமுக ஒரு போராட்டமாவது நடத்தியதுண்டா? மது விலக்கு பற்றி பேச திமுகவுக்கு தகுதி கிடையாது. அதிமுகவோ மதுக்கடைகளை மூட முடியாது, என தெரிவித்து விட்டது. இரு கட்சிகளும் ஊழல் மிகுந்த கட்சிகள். ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பது போல் நடக்கின்றன.
மதிமுகவை 1996-ல் அழிக்க நினைத்தீர்கள். எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனை வைத்து போட்டி பொதுக்குழு நடத்தினீர்கள். தோல்வியை சந்தித்தீர்கள். தற்போதும் அழிக்க நினைக்கிறீர்கள். தோல்வியைத்தான் சந்திப்பீர்கள்.
இத்தனை கஷ்ட, நஷ்டங்களுக்கு இடையேயும் மதிமுக எழுச்சியுடனும், உணர்ச்சியுடனும் தொடர்ந்து வருகிறது. மதுரையில் நடக்கும் மக்கள் நலக்கூட்டணி மாநாடு தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கான தொடக்கமாகும் என, வைகோ பேசினார்.
ஸ்டாலின் நிகழ்ச்சி
மதிமுகவில் இருந்து தென் மாவட்ட நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் திமுகவுக்கு தாவினர். இவர்கள் மதிமுகவில் உள்ள தங்கள் ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி இன்று திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக் குடியில் வைகோ இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது tamil.hindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக