சனி, 30 ஜனவரி, 2016

அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி? சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்......

அதிமுக தேர்தல் பணியாற்றும்படி, கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து,
ஆனால், அ.தி.மு.க., சார்பில், அதிகாரப்பூர்வமாக எந்த கட்சியுடனும், இன்னமும் கூட்டணி பேச்சுவார்த்தை துவக்கப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், '234 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும்' எனக் கூறியிருப்பது, அ.தி.மு.க., கூட்டணி கனவில் மிதக்கும் கட்சிகளுக்கு, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின்போது, அ.தி.மு.க., தனித்து போட்டியிடும் என, முதல் ஆளாக, முதல்வர் ஜெயலலிதா, கட்சி பொதுக்குழுவில் அறிவித்தார்.ஆனால், டிச., 31ம் தேதி நடந்த பொதுக் குழுவில், வரும் சட்டசபை தேர்தலுக்கு தனித்து போட்டி என, ஜெயலலிதா அறிவிக்கவில்லை. 'தேர்தல் நெருக்கத்தில், சூழ்நிலைக்கு ஏற்ப, சரியான முடிவை எடுப்பேன்' என, அறிவித்தார். இது, சிறிய கட்சிகளிடம், உற்சாகத்தை ஏற்படுத்தியது. 'அ.தி.மு.க., கூட்டணி அமைக்கும்; அதில் இணையலாம்' என, சிறிய கட்சிகளின் தலைவர்கள் மனக்கோட்டை கட்டினர். சிங்கம் சிங்கம்னு அசிங்கம் ஆகாம இருந்தா சரி  


இந்நிலையில்,நேற்று, முதல்வரும், அ.தி.மு.க., பொது செயலருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,'நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், மிகப் பெரிய ஓட்டு
வித்தியாசத்தில், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும்' என தெரிவித்துள்ளார்.இதில் கூட்டணி என்ற வார்த்தையை, அவர் பயன்படுத்தவில்லை. எனவே, அ.தி.மு.க., தனித்து போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது அ.தி.மு.க., கூட்டணி கனவில் இருந்த, சிறிய கட்சிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்:
* தேர்தல் தொடர்பாக, நான் குறிப்பிடும் பணிகளை, கட்சியினர்ஒவ்வொருவரும் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும்
* ஜன., 20ம் தேதி வெளியிடப்பட்ட, இறுதி வாக்காளர் பட்டியலில், திருத்தம் மேற்கொள்ள, ஜன., 31 மற்றும் பிப்., 6ல் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலை
Advertisement
சரி பார்க்க வேண்டும்
* கட்சி பூத் ஏஜன்டுகள், தங்கள் ஓட்டுச் சாவடிக்கு உட்பட்ட இடங்களில், வீடு வீடாகச் சென்று, முறையாக ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலை, சரி பார்க்க வேண்டும்
* தமிழக மக்களின் பேராதரவு பெற்று விளங்கும் ஆட்சியை நடத்தி வரும் அ.தி.மு.க., விரைவில் நடைபெற உள்ள, சட்டசபை பொதுத் தேர்தலில், 234 தொகுதிகளிலும், மிகப் பெரிய ஓட்டு வித்தியாசத்தில், வெற்றி பெற வேண்டும்
* என்னுடைய வழிகாட்டுதலில், அந்தப் பணிகளை, நீங்கள் வெற்றிகரமாக, கடமை உணர்வுடன் செய்து முடித்திட வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக