ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ஸ்டாலின்: கருத்துகணிப்பு விமர்சனம் செய்யமாட்டோம்...மக்கள் மாற்றத்துக்கு தயாராகி...

ஜெயலலிதா சொல்லியிருப்பது சிறந்த நகைச்சுவையான செய்தி: ஸ்டாலின் பேட்டி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் என்று ஜெயலலிதா சொல்லியிருப்பது சிறந்த நகைச்சுவையான செய்தி' என்று நாகர்கோவிலில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறினார். நாகர்கோவில் அருகே முன்னாள் எம்.பி., சங்கரலிங்கம் மறைந்ததை தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்ற திமுக பொருளாளர் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்தாரிடம் ஆறுதல் கூறினார. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கலைஞர் கொடுத்த உறுதிமொழியை தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றுவோம்.
 தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளது என்று ஜெயலலிதா சொல்லியுள்ளார். ஆனால் மக்கள் சொல்லவில்லை. கருத்துக்கணிப்பில் தி.மு.க., வை பொறுத்த வரை சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் வரவேற்க மாட்டோம். விமர்சனமும் செய்ய மாட்டோம்.
ஒட்டு மொத்தமாக தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்டார்கள். இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளியாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளது தமிழகத்தை அல்ல. அவர்கள் உறவினர்கள் மற்றும் சசிகலா குடும்பத்தினருக்குதான் பொருந்தும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்று சொல்லியிருப்பது மிகுந்த நகைசுவைக்குரிய செய்தி. தேர்தல் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் தெரிவிப்போம். ஐதராபாத்தில் தலித் மாணவர் சாவுக்கு யார் காரணமோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக