வெள்ளி, 1 ஜனவரி, 2016

வைகோ வாசன் சந்திப்பு! மக்கள் நலகூட்டணி வீறு கொண்டு எழுகிறது

மக்கள் நலக்கூட்டனி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் இன்று மாலையில் சென்னை தேனாம்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தனர்.  இச்சந்திப்பின்ப்போது, வாசனை கூட்டணியில் சேர வலியுத்தினர்.இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  ‘’மக்கள் நலக்கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்.  இக்கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைவார்’’ என்று நம்பிக் கை தெரிவித்தார்.தமிழகத்தில் கட்சி சார்பில் நடத்தப்படும் 2ம் கட்ட சுற்றுப் பயணத்துக்குப் பிறகே தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன்,  ‘’தமிழக அரசியல் சூழல் குறித்து மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விவாதித்தனர்.  கூட்டணியில் இணையுமாறு மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.  2ம் கட்ட சுற்றுப் பயணம் முடிந்த பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.nakkheeran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக