வெள்ளி, 29 ஜனவரி, 2016

கவர்ச்சி நடனம்..கர்நாடக ஜெயிலில் குடியரசு தினம் படு ஜோர்


கர்நாடக மாநிலம் பிஜபூர் சிறைச்சாலையில், குடியரசு தினத்தையொட்டி கைதிகளின் முன்னிலையில் நடத்தப்பட்ட இளம்பெண்களின் ஆபாச நடன நிகழ்ச்சி அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கலை நிகழ்ச்சிகளில் கவர்ச்சி நடன நிகழ்சியும் இடம் பெற்றிருந்தது. சிறைச் சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில்,  கைதிகள்  யாரும் எதிர்பாராத வண்ணம், கவர்ச்சி ஆடையில் இளம்பெண் தோன்றி குத்தாட்டம் போட்டார். அப்போது கைதிகள் அனைவரும் அரவாரம் செய்தனர்.;இந்த நடனத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகள் சிலர்,  ரூபாய் தாள்களை அந்த கவர்ச்சி நடனப் பெண்மணி மீது வீசி ஆரவாரம் செய்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.>இந்த ஆபாச நடன நிகழ்ச்சி,  மாநில அமைச்சர் மற்றும் காவல்துறை இயக்குனர் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தில் சிறைச்சாலையில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்துள்ளது என்பது சுதந்திர போராட்ட வீரர்களை அவமானப்படுத்தும் செயல் என்று  சமூக ஆர்வலர்களும், சுதந்திர போராட்ட தியாகிகளும் குறிப்பிட்டுள்ளனர்.வெப்துனியா.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக