செவ்வாய், 12 ஜனவரி, 2016

அனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜார்....பீப்புக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையாமுங்கோ

பீப் பாடல் தொடர்பாக கோவை காவல்துறை முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத் பெண்களை அவதூறு செய்யும் வகையில் சிம்பு பாடிய பீப் பாடல் இருப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் ஆகிய இருவர் மீதும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிம்பு, அனிருத் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கனடாவில் இருந்த அனிருத், நேற்றிரவு கோவை காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். தனக்கும் பீப் பாடலுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனிருத் தெரிவித்ததாவது: கோவை காவல்நிலையத்துக்கு நேரில் சென்று என்னுடைய விளக்கத்தை அளித்துவிட்டேன். எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக