ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ராஜபாளையத்தில் உயர் ரக பேரீச்சை சாகுபடி: சாதிக்கும் பி.டெக்., பட்டதாரி

ராஜபாளையம்: அரேபிய நாடுகளில் மட்டுமே விளையும் 'கனேஷில்' எனும்
உயர் ரக பேரீச்சம்பழம், ராஜபாளையம் தரிசு காட்டில் அமோகமாக விளைவித்து அசத்துகிறார், பி.டெக்., பட்டதாரி அழகர் பெருமாள். தமிழகத்தில் வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக சிவகங்கை, விருது நகர் மாவட்டங்கள். இங்கு மானாவரி சாகுபடியை மட்டுமே விவசாயிகள் நம்பி உள்ளனர். 2011ல் இருந்து, 2015 ஜூலை வரை மழையில்லாமல் வறட்சி
நிலவியது. மானாவரி சாகுபடிக்கும் வழியில்லாமல் போனது. பேரீச்சை தோட்டம் இக்கட்டான நிலையில் தரிசு நிலங்களை வளமிக்க பூமியாக மாற்றும் முயற்சியில் ராஜபாளையத்தை சேர்ந்த அழகர்பெருமாள், 33, ஈடுபட்டார்.


இவர் லண்டனில் பி.டெக்., (டெக்ஸ்டைல்ஸ்), எம்.எஸ்சி., (டெக்ஸ்டைல்ஸ்) பட்டம் பெற்றவர். ராஜபாளையத்தில் மில் நிர்வாகத்தை கவனித்து வந்த இவர், கடும் வறட்சியை தாங்கியும், குறைந்த நீரில் வளரும் தாவரங்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டார். இதன் பலனாக அரேபிய
நாடுகளில் மட்டுமே வளரும் 'கனேஷில்' எனும் உயர் ரக பேரீச்சம்பழ மரங்களை தன் தோட்டத்தில் வளர்க்க முடிவு செய்தார்.

இதற்காக ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கினார். 2012ல் சவுதி அரேபியாவில் இருந்து, 500 எண்ணிக்கையில் 'கனேஷில்' ரக பேரீச்சம் கன்றுகளை இறக்குமதி செய்து பேரீச்சை தோட்டம் அமைத்தார்.

100 ஆண்டு ஆயுள்
ஐந்து ஏக்கரில், 20 அடிக்கு ஒன்று வீதம், 500 கன்றுகள் நடப்பட்டன. வேர் ஆழமாக பரவும் வரை இயற்கை உரம் பயன்படுத்தி ஆறு மாதம் வரை கன்றுகள் வளர்க்கப்பட்டன. மூன்றாவது ஆண்டில் துவக்கத்திலேயே மரத்தில் பேரீச்சம் காய்கள் காய்த்து குலுங்கின. பேரீச்சம்பழங்களை குறைந்த விலைக்கு சந்தைப்படுத்தினர். மரத்தின் ஆயுள் காலம், 100 ஆண்டுகள். 50 முதல், 70 அடி வரை வளரும். மரம் ஒன்றில் தினமும், 20 கிலோ வரை பேரீச்சம்பழம் கிடைக்கிறது. மரத்தின் வயது கூடும்போது உற்பத்தியும்
இரட்டிப்பாகிறது. உதாரணமாக, 75 ஆண்டு மரத்தில், 100 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். ரூ.200க்கு விற்பனை அழகர் பெருமாள் கூறியதாவது:விருதுநகரில் கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது.

அதை தாங்கி வளரும் பேரீச்சை மரங்களை வளர்த்தேன். கை மேல் பலன் கிடைத்தது. பேரீச்சையில் கனேஷில் (சிவப்பு நிறம்), பரி (மஞ்சள் நிறம்) என இருவகை உண்டு.
கனேஷில் ரகம் தரமாகவும், சுவைமிக்கதாகவும் இருக்கும். சவுதி அரேபியாவில் இருந்து ஒரு கன்று 5,000 ரூபாய்க்கு வாங்கினேன். தற்போது குஜராத்தில் 'அத்துல் குரூப்' நிறுவனம் ஆண்,

பெண் இனத்தை குறிக்கும் 'டி.என்.ஏ.' சான்றிதழுடன் கன்று ஒன்று 3,000 விலையில் தருகிறது. என் தோட்டத்தில், 450 பெண் கன்றுகளுடன், இனப்பெருக்கத்துக்காக, 50 ஆண் கன்றுகளையும் வளர்க்கிறேன். செயற்கை முறையில் பூக்களில் மகரந்த சேர்க்கை நடக்கிறது. பெண் கன்றுகள் மட்டுமே பழம் தரும். வண்டல், செம்மண், மணல் சத்துமிக்க நிலங்களில் மட்டுமே பேரீச்சம் வளரும். நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது. தென்னை வளர்ப்பது போல் பேரீச்சை வளர்க்கலாம். அன்னிய செலாவணி

பேரீச்சத்துக்கு குறைந்த நீர் போதும். கடும் வறட்சி காலத்தில் மரம் ஒன்றுக்கு தினமும், 16 லிட்டர் நீர் தேவைப்படும். தென் மாவட்ட அளவில் முதல்முறையாக அரேபிய பேரீச்சம்பழம் உற்பத்தி செய்கிறேன்.
'
இஸ்லாமிய மரம்' என அழைக்கப்படும் 'அஜ்வா' எனும் உயர் ரக பேரீச்சை மரங்கள், 10 எண்ணிக்கையில் சோதனை அடிப்படையில் வளர்க்கிறேன். இப்பழத்தின் விலை 500. கனேஷில் ரகம் கிலோ 200 ரூபாய் லாபம் அதிகம் இல்லை. எனினும் அன்னிய செலாவணி ஓரளவு குறைகிறது.இவ்வாறு அவர் கூறினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக