பவானிதேவியிடம் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா.
பெல்ஜியத்தில் நடந்த பிளமிஸ் ஓபன் வாள்வீச்சு போட்டியில் வெண்கலப்பதக்கம்
வென்ற சி.ஏ.பவானி தேவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் ஜெயலலிதா
வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை,
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கணை சி.ஏ.பவானி தேவி,
கடந்த 2014ல் ஆசிய வாள்வீச்சு போட்டியில் வெள்ளிப்பதக்கம், கடந்தாண்டு
மங்கோலியாவில் நடந்த போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்.
காமன் வெல்த் போட்டிகளிலும் பதக்கம் வென்ற பவானிதேவி, கடந்தாண்டு
வெனிசுலா, பிரான்ஸ் நாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க முதல்வர்
ஜெயலிலதாவிடம் நிதி கோரினார். கோரிக்கை ஏற்கப்பட்டு ரூ.3 லட்சம் நிதி
வழங்கப்பட்டது.
பெல்ஜியம் நாட்டில் கடந்த அக்டோபரில் நடந்த உலகளவிலான 18 வது பிளமிஸ் ஓபன்
போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பவானி தேவியை பாராட்டிய முதல்வர்
ஜெயலலிதா, அவருக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
தொடர்ந்து, கடந்த மாதம் 28-ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஊக்கத்தொகையை
வழங்கி, பாராட்டினார். பவானிதேவியும் நன்றி தெரிவித்தார்'' என்று
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது //tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக