வெள்ளி, 29 ஜனவரி, 2016

Amnesty விருதைப் பெறும் முதல் இந்தியர்/ தமிழர் ஹென்றி டிபேன் Henri Tiphagne for Amnesty human rights award

Indian activist Henri Tiphagne selected for Amnesty human rights award
ஹென்றி திபேன் | கோப்புப் படம் இந்தியாவில் மனித உரிமைக்காக போராடி வரும் வழக்கறிஞரும் தமிழருமான ஹென்றி திபேன், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (ஜெர்மனி) அமைப்பின் 8-வது மனித உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ.7.3 லட்சம் ரொக்க பரிசுத் தொகை அடங்கிய இந்த விருது, ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள மேக்சிம் கோர்கி திரையரங்கில் வரும் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் இவர்தான்.
இதுகுறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (ஜெர்மனி) அமைப்பின் இயக்குநர் செல்மின் லிஸ்கான் கூறும்போது, “ஹென்றி திபேனும் அவரது நிறுவனமான மக்கள் கண்காணிப்பகமும் (பீப்புள்’ஸ் வாட்ச்) பல்வேறு தடைகள், அடக்குமுறைகளைக் கடந்து இந்தியாவில் மனித உரிமையை நிலைநாட்டுவதற்காக போராடி வருகின்றன.
இதற்காக இவருக்கு இந்த விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவரைப் போல இந்தியாவில் மனித உரிமைக்காக போராடி வரும் இயக்கங்களுக்கு எங்களது ஆதரவு உண்டு என்பதை உணர்த்தும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது” என்றார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்வது, ஆவணப்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்குவது ஆகிய பணிகளை மக்கள் கண்காணிப்பகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது tamil.hindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக