புதன், 6 ஜனவரி, 2016

அ.தி.மு.க.தேர்தல் பிரசாரம்...ஈசான்ய மூலையில் இருந்து, காலை, 8:15 மணிக்கு துவக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், இன்று காலை, 8:15 மணிக்கு, தேர்தல் பிரசாரம் துவக்கப்படுகிறது.
தமிழக சட்டசபையின் பதவி காலம், மே மாதம் நிறைவு பெறுகிறது. எனவே, மார்ச் மாதம் துவக்கத்தில், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலின் போது, மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்கு முன், முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அதே பாணியில்,சட்டசபை தேர்தல் பணிகளை துவக்க, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம், அ.தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்து கூறி, ஓட்டுகளைப் பெறுவதற்காக,ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், ஜெயலலிதா பேரவை சார்பில், ஏஜன்ட் நியமிக்கும் படி, சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா உத்தரவிட்டார்.   பணபட்டுவாடா துவங்கிடிச்சி டோய் இன்னும் 4 மாதம் களுக்கு பிரியாணி, சாராய வியாபாரம் கொடி கட்டி பறக்கும்...ஏய் கோவாலு பொருளாதாரம் உயரும்ல ?

அதன்படி, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், ஒரு ஏஜன்ட், ஜெயலலிதா பேரவை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு தேர்தல் பிரசாரம் குறித்து, பயிற்சியும் அளிக்கப்பட்டது.
அவர்கள் தலைமையில், இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்க, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ஈசான்ய மூலையில் இருந்து, காலை, 8:15 மணிக்கு, தேர்தல் பிரசாரத்தை துவக்குகின்றனர்.

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறிய தாவது: கடந்த 29ம் தேதி, ஜெயலலிதா பேரவை சார்பில்,

அச்சிடப்பட்டுள்ள தேர்தல் பிரசார நோட்டீஸ்களை, சிறுவாபுரி முருகன் கோவிலில், சுவாமி பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து, பிரசாரம் முதல்வருக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில், இன்று (6ம் தேதி) தேர்தல் பிரசாரம் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி, அனைத்து தொகுதிகளிலும், தேர்தல் பிரசாரம் துவக்கப்படுகிறது என்றனர்.

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக