ஞாயிறு, 24 ஜனவரி, 2016

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு:5 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

கனடா நாட்டின் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கனடாவின் மேற்கு மாகாணமான சஸ்கசவன் பகுதியில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது அங்கு பயிலும் மாணவனாக அல்லது முன்னாள் மாணவனாக இருக்கலாம் என முதல்கட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்குள் நுழைந்த மாணவன் திடீரென கண்மூடித்தனமாக சுட்டதாகவும், உடனடியாக மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை சுவிட்சர்லாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூதேயூ உறுதிப்படுத்தினார்.puthiyathalaimurai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக