செவ்வாய், 5 ஜனவரி, 2016

சவுதி அரேபியா: 47 பேருக்கு மரண தண்டனை...ஷியா மதகுரு உட்பட...ஐநாவின் மனித உரிமை தலைமை சவுதிக்குதாய்ன்

CXzKYeNUAAAiuaNசவுதி அரேபியாவில் ஷியா மதகுரு உட்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. மேல்முறையீடு வாய்ப்புகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததால் தலைநகர் ரியாத் மற்றும் 12 நகரங்களில் இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்களில் ஷேக் நிமர் அல் நிமர் என்ற ஷியா மதகுருவுக்கு தண்டனை நிறவேற்றப்பட்டது சிறுபான்மை ஷியா மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் அதிக அளவில் வசிக்கும் ஷியா முஸ்லிம்கள் கூடுதல் உரிமைகள் கேட்டு கடந்த 2011-ல் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னணியில் மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனிடையே சவுதியில் கடந்த 2015-ம் ஆண்டில் 157 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இது கடந்த 20 ஆண்டுகளில் அதிகபட்ச அளவாகும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஷியா மதகுரு மரண தண்டனை: ஈரான் கண்டனம்
சவுதி அரேபியாவில் ஷியா மதகுரு நிமர் அல்-நிமர் என்பவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை ஈரான் கடுமையாக கண்டித்துள்ளது. இதற்கான விலையை சவுதி அரேபியா கொடுத்தேயாக வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுசைன் ஜாபேர் அன்சாரி தெரிவித்துள்ளார்.
“சவுதி அரசங்கம் பயங்கரவாத இயக்கங்களையும் தீவிரவாதத்தையும் ஆதரிக்கிறது, ஆனால் உள்நாட்டு விமர்சகர்களை அடக்கி ஒடுக்குவதோடு மரண தண்டனையும் அளிக்கிறது. இத்தகைய கொள்கைகளைக் கடைபிடிக்கும் சவுதி அரசு இதற்கான விலையைக் கொடுத்தேயாகவேண்டும்.” என்றார் அன்சாரி.
அமைதி காக்க மதகுருவின் சகோதரர் கோரிக்கை:
முக்கியமான ஷியா மதகுருவை சவுதி அரசு மரண தண்டனைக்கு ஆளாக்கியது சிறுபான்மை ஷியா இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று எச்சரித்த மதகுருவின் சகோதரர், அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
“நம் மதகுரு வன்முறைகளை எதிர்த்தவர் அவர் வழியில் நாமும் அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டும், வன்முறையை நாங்கள் மறுக்கிறோம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக