திங்கள், 18 ஜனவரி, 2016

1916 முதல் தமிழ்த்திரைப்படம் 2016 தமிழ் திரைப்பட நூற்றாண்டு..கீசகவதம்..நடராஜ முதலியார் தயாரிப்பு.


The year marked the birth of the Silent Film in Tamil Nadu, the precursor to the modern day Tamil Cinema, as we know it. R.Nataraja Mudaliyar
 தமிழ் சினிமா நூற்றாண்டு - பரிதாபம்...
ஒரு மாபெரும் கலை தமிழ் மண்ணில் தோன்றி இந்த ஆண்டோடு நூற்றாண்டை நிறைவு செய்யவிருக்கிறது. ஆனால் அது பற்றி எந்த ஊடகமோ, அச்சு இதழ்களோ ஒரு வரிக் கூட எழுதவில்லை. முதலில் யாருக்குமோ இந்த தமிழ் சினிமாவின் நூற்றாண்டு என்கிற தகவல் கூட தெரியவில்லை. இதுதான் தமிழ் சினிமாவை மையப்படுத்தி வெளிவரும் பல இதழ்கள், தொலைக்காட்சிகளின் லட்சணம். ஊடகங்களை விடவும், இதனை கொண்டாட வேண்டிய தமிழ் சினிமா கலைஞர்களும் இது பற்றி எவ்வித தெளிவும் இல்லாமல் இருக்கிறார்கள். நடந்து முடிந்த சென்னை திரைப்பட விழாவில் கூட இது தமிழ் சினிமாவின் நூற்றாண்டு என்கிற எவ்வித பதிவும், கொண்டாட்டமும் இல்லை.
இதற்கிடையில் நூற்றாண்டு என்கிற வரலாறு கூட தெரியாமல் அரந்தை மணியன் போன்றவர்கள் குழப்பத்தை வெகுஜன மக்களிடத்தில் உருவாக்குகிறார்கள். தமிழ் சமூகத்தின் சாபக்கேடு இதெல்லாம். தங்களுடைய மண்ணில் ஒரு கலை தோன்றி, இந்த மண்ணையே ஆண்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு எத்தனை வயது என்கிற அடிப்படை அறிவுக் கூட இல்லாமல் சினிமா கலைஞர்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களே மீண்டும் சொல்கிறேன், இந்திய சினிமாவின் நூற்றாண்டை எவ்வித விட்டுக்கொடுத்தலும் இன்றி இந்திய அரசே கொண்டாடியது. ஆனால் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு எவ்வித தடயமும் இல்லாமல், அதிர்வும் இன்றி தேமேவென நகர்ந்துப் போகிறது.

ஊடக நண்பர்களாவது இது பற்றி உடனே குறைந்தது ஒரு கட்டுரையாவது வெளியிடுங்கள்.
(இதற்கு முன்னர் ஊடக நண்பர்களின் சினிமா அறிவு பற்றி எழுதிய கட்டுரையை நீக்க சொல்லி, முகநூல் நிர்வாகம் தகவல் அனுப்பியது. முன்னமே இப்படி பலமுறை நீக்காமல் இருந்து என்னுடைய மூன்று முகநூல் கணக்குகளும் முடக்கப்பட்டது. நண்பர்களே கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளுங்கள். சின்னப் பிள்ளை போல புகார் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். இந்த கட்டுரையில் புகார் சொல்ல ஏதுமில்லை, எனவே நீக்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்)    நன்றி .Arun Mo (அருண் தமிழ்ஸ்டுடியோ)

1 கருத்து:

  1. http://www.dinamani.com/specials/nool-aragam/2017/mar/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81---2018-2668904.html

    பதிலளிநீக்கு