செவ்வாய், 5 ஜனவரி, 2016

ஒரே இன்னிங்ஸில் 1000 ஓட்டங்கள் எடுத்த மும்பை பள்ளி மாணவன்.... 59 சிக்சர்களும், 127 பவுண்டரிகளும்


இந்தியாவின் மும்பை நகரில் பள்ளி மாணவன் ஒருவன் ஒரே இன்னிங்ஸில் ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து உலக அளவில் பள்ளிக் கிரிக்கெட் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறான். 1000 ஓட்டங்கள் எடுத்த மாணவன் தனவதே மும்பையில் நடத்தப்படும் எச்.டி.பண்டாரி கோப்பைக்கான பள்ளிகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் , 15 வயதான ப்ரனவ் தனவதே ஆயிரம் ஓட்டங்களை எடுத்தான். இதன் மூலம் 1899ம் ஆண்டில் ஆர்தர் கோலின்ஸ் என்பவரின் 628 ரன் முந்தைய சாதனையை அவன் முறியடித்திருக்கிறான். பிரணவ் தனவதேயின் ஆட்டத்தில் 59 சிக்சர்களும், 127 பவுண்டரிகளும் அடித்து தள்ளினார். அவரது பள்ளியான கே.சி.காந்தி பள்ளி அணி ஆர்ய குருகுல பள்ளியுடன் மோதிய போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
அவரது இந்த ஆட்டத்தை அடுத்து, அவரது அணி, 1465 ஓட்டங்களுடன் இன்னிங்ஸை முடித்துக்கொள்வதாக அறிவித்தது. மும்பை பள்ளிக் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் கடுமையானவை. இந்தப் போட்டிகள்தான் சச்சின் டெண்டுல்கரையும், தற்போதைய இந்திய ஆரம்ப பேட்ஸ்மன் ரோஹிட் ஷர்மாவையும் உருவாக்கியிருக்கின்றன. " நான் ஆடத்தொடங்கியபோது சாதனையை முறியடிப்பது பற்றியெல்லாம் மனதில் வைத்திருக்கவில்லை. அது குறித்து எனது கவனம் இல்லை. எனக்கு இயல்பான ஆட்டத்தை நான் ஆடினேன்" என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் தனவதே bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக