செவ்வாய், 15 டிசம்பர், 2015

Y.G.மகேந்திரா: பீப் பாடல் குற்றவாளிகளை தூக்கில் போடவேண்டும்...

சென்னை: கடும் கண்டனம் மற்றும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பீப் பாடலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து தூக்கிலிட வேண்டும் என்று ஒய்.ஜி.மகேந்திரா கருத்துத் தெரிவித்துள்ளார்.
பீப் பாடலுக்கு எதிராக நாளுக்குநாள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இப்பாடல் குறித்து ஏற்கனவே கங்கை அமரன், வைரமுத்து, பா.விஜய் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில்அனிருத்தின் நெருங்கிய உறவினரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
ஒய்.ஜி.மகேந்திரா தனது பேஸ்புக் பக்கத்தில் ஆவேசமாக சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அவர் கூறும்போது "மற்றுமொரு சர்ச்சைக்குரிய தமிழ்ப் பாடல் பீப் பாடல். அனிருத் எனக்கும் அந்தப் பாடலுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை எனத் தெளிவாகக் கூறி இருக்கிறார்
பொறுப்பாளி யார் இந்தப் பாடலுக்கு பொறுப்பாளி யாராக இருந்தாலும் இந்தப்
பாடலை நான் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இந்தப் பாடல் உருவாக, வெளியாக காரணம் யார் என்பதைக் கண்டறியவேண்டும். இந்த அசிங்கமான பாடலில் எந்தவொரு உணர்வும், எந்தவொரு மெலொடியும் இல்லை.
குழந்தைகளை அந்த பீப் சத்தத்தில் மறைந்திருக்கும் வார்த்தை என்ன எனக் கேட்கச் செய்து, பெரியவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் பாடலாக பீப் பாடல் இருக்கிறது
இந்தப் பாடல் தேவையா? நாடு இருக்கும் நிலையில் இந்தப் பாடல் தேவையான ஒன்றா? லீக்கானதோ, ஆகாததோ எனினும் மூளை பாதிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே இப்படி ஒரு பாடலை உருவாக்க இயலும்
கவிஞர் கண்ணதாசன் தற்போது தனது கல்லறையில் கண்டிப்பாக இந்தப் பாடலால் நிம்மதியின்றியே இருப்பார். ஆனாலும் யார் மீதேனும் தவறான பழிகள் வந்து சேரும் முன் உண்மையான நபரைக் கண்டறிந்து அவரைத் தூக்கிலிட வேண்டும்" என்று ஒய்.ஜி.மகேந்திரா தனது கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.

Read more at: /tamil.filmibeat.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக