வியாழன், 24 டிசம்பர், 2015

நீக்கப்பட்ட பாஜக MP கீர்த்தி ஆசாத்துக்கு சுப்பிரமணியம் சுவாமி பகிரங்க ஆதரவு

டெல்லி: கீர்த்தி ஆசாத் போன்ற நேர்மையானவரை கட்சி இழந்துவிடக்கூடாது என்பதால் அவருக்கு பதில் நோட்டீஸ் அனுப்ப உதவி செய்வதாகவும், கீர்த்தி ஆசாத் இன்னும் பாஜகவில்தான் தொடருகிறார் என்பதால், அவருக்கு உதவி செய்வதில் தப்பில்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக மத்திய அமைச்சர், ஜேட்லி பதவி வகித்தபோது, பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதான புனரமைப்புக்கு ரூ.24 கோடி மதிப்பிடப்பிடப்பட்டு, ரூ.114 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக ஒப்பந்தப்புள்ளியில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. BJP shouldn't lose an honest person like Kirti Azad: Subramanian Swamy ஒரு லேப்டாப்புக்கு ரூ.36 ஆயிரம் ஒரு நாள் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிரின்டருக்கு தினமும் ரூ.3,000க்கு வாடகை அளிக்கப்பட்டுள்ளது. அதில் பணி செய்ததாக காட்டப்பட்ட 14 நிறுவனங்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கிரிக்கெட் சங்க ஊழலில் மத்திய அமைச்சர் ஜேட்லிக்கு தொடர்பிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். சிபிஐ தனது அலுவலகத்தில் சோதனை நடத்தியதற்கு பதிலடியாக கெஜ்ரிவால் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் ஜேட்லி. இதுகுறித்து டிவிட்டரில் பாஜக எம்.பி கீர்த்தி ஆசாத் கூறிய கருத்து ஒன்று ஜேட்லியை சாடுவதாக இருந்தது. அந்த டிவிட்டரில், ஜேட்லி டிவிட்டர் அக்கவுண்டையும் டேக் செய்து, அவரை ஆண்மையற்றவர் என்று கீர்த்தியின் டிவிட் சாடியிருந்தது. இதையடுத்து பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நேற்று அக்கட்சி அறிவித்தது. அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசை தயாரிக்கும் பணியில் பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, கீர்த்தி ஆசாத்திற்கு உதவி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்து இன்று பேட்டியளித்த கீர்த்தி ஆசாத், பாஜகவுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பும் விஷயத்தில் எனக்கு உதவி புரிவதாக பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். கீர்த்தி ஆசாத் போன்ற நேர்மையானவரை கட்சி இழந்துவிடக்கூடாது என்பதால் அவருக்கு உதவி செய்வதாகவும், கீர்த்தி ஆசாத் இன்னும் பாஜகவில்தான் தொடருகிறார் என்பதால், அவருக்கு உதவி செய்வதில் தப்பில்லை என்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளா //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக