வியாழன், 17 டிசம்பர், 2015

அவனை தீ வைத்து எரிக்க வேண்டும் : ஜோதி சிங் தாயார் ஆவேசம்.....


புதுடெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் தாயார் மூன்று வருடங்களுக்கு பின்னர் தன்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்று அறிவித்து உள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சிறுவனை விடுவிக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு, இதே டிசம்பர் 16–ந் தேதி இரவு, மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதன் 3-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. அஞ்சலி செலுத்திய பின்னர் மாணவியின் தாயார் ஆஷா தேவி பேசுகையில், தன்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்றும், என்னுடைய மகளின் பெயரை கூறுவது எனக்கு வெட்கமானது கிடையாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.   இந்த சம்பவ டாகுமேண்டரி படத்தை திரையிட விடாமல் தடுத்த மோடியின் அரசும் மிகபெரும் குற்றவாளிதான் , குற்றவாளிகளை பற்றி மக்களுக்கு தெளிவு பிறக்க கூடாது என்று சங்பரிவார் ஏன் தடுக்கிறது?

டெல்லியில் நடந்த கூட்டத்தில் பேசிய ஆஷா தேவி, “என்னுடைய மகளின் பெயரை எடுப்பதில் நான் வெட்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தங்களுடைய பெயரை மறைக்க கூடாது. குற்றவாளிகளே வெட்கப்பட வேண்டும், அவர்களுடைய பெயரை மறைக்க வேண்டும். என்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்று எல்லோரிடமும் தெரிவிக்க விரும்புகின்றேன். இன்றில் இருந்து என்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்று எல்லோரிடமும் கூறுவேன்,” என்று கூறிஉள்ளார். இவ்வழக்கில் விடுதலை செய்யப்பட உள்ள சிறுவன் குறுத்து ஆஷா தேவி பேசுகையில், எனது மகள் இறந்து மூன்றாவது ஆண்டு நாள் அனுசரிக்கப்படும் நிலையில், அவனை தீ வைத்து எரிக்க வேண்டும். இதில் நீதி எங்கு இருக்கிறது? என்று கூறிஉள்ளார்.  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக