ஞாயிறு, 13 டிசம்பர், 2015

Delhi Gang Rape முக்கிய குற்றவாளி விடுதலையாகிறான்...பாலியல் கொலை செய்தவன் வயது கொஞ்சம் கம்மியாம்

டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனை விடுவிக்க நடவடிக்கை டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனை விடுதலை செய்வதற்கு பலாத்காரத்தால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சிறுவனை விடுவிக்க அரசு முன்வந்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் 107வது பிரிவின் கீழ் அந்த சிறுவனிடம் ஒப்பந்தம் ஒன்று செய்ய உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்த சிறுவனை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் குற்றம் செய்தவனை சுதந்திரமாக உலாவ விடுவதா, விடுதலை செய்வதை ஏற்க முடியாது என்று பாதிக்கப்பட்ட பெண் நிர்பயாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக