ஞாயிறு, 27 டிசம்பர், 2015

நிருபர்களை காறி துப்பிய விஜயகாந்த் .....இந்த ஆளு பீப் வார்த்தையை சொல்லிடுவாரோ...பயமாயிருக்கு

பேட்டியின்போது காறி துப்பிய விஜயகாந்த்திற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை இன்று விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்  பேட்டியளித்தபோது, அவரிடம் நிருபர் ஒருவர், ‘‘2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், ‘‘ஆட்சியை பிடிக்கவே பிடிக்காது. இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் போய் நீங்கள் கேட்க முடியுமா?. பத்திரிகையாளர்களா நீங்கள் ‘தூ’ என காறி துப்பினார். விஜயகாந்தின் இந்த செயல்பாடை பார்த்து அங்கிருந்த தே.மு.தி.க.வினரும், பத்திரிகையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர், உடனடியாக விஜயகாந்த் காரில் ஏறி சென்றுவிட்டார். விஜயகாந்தின் இந்த அருவருக்கத்தக்க செயல் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. அதைப்பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர். dailtythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக