செவ்வாய், 1 டிசம்பர், 2015

ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான வர்த்தகத்தை பாதுகாக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது: புதின் குற்றச்சாட்டு

லே போர்கேட், ரஷியாவின் போர் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, அதை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் 2 சுட்டு வீழ்த்தின. இவ்விவகாரம் காரணமாக துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முற்றி உள்ளது. ரஷிய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியது. ஆனால் எச்சரிக்கை விடப்படவில்லை என்று ரஷியா மறுத்தது. ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து, போர் விமானங்கள், ஏவுகணை தாங்கிய கப்பல்கள் என தனது ராணுவ பலத்தை சிரியாவை சுற்றிலும் ரஷியா அதிகரித்து உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நேற்று பாரீஸில் பருவ நிலை மாநாடு குறித்த மாநாட்டின் போது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட புதின் ,ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் துருக்கிக்கும் இடையே நடைபெறும் எண்ணைய் வர்த்தகத்தை பாதுகாக்க தங்கள் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக