ஞாயிறு, 20 டிசம்பர், 2015

எங்கே தேடுவேன் அவனுகளை எங்கே தேடுவேன்....சிம்பு அனிருத் வலைவீசும் போலீஸ்

கேமிராவுக்கு முன்னால்… அல்லது ஏதாவது ஸ்டுயோவில் அட்டைக் கத்தியை, டம்மி துப்பாக்கியை வைத்துக் கொண்டு பஞ்ச் வசனம் முழங்குவதும், நேரில் ட்ரவுரைப் பிடித்தபடி ஓடி ஒளிவதும் சினிமாக்காரர்களின் வழக்கம். பீப் பாட்டால் பிராப்ளமாகி நிற்கும் சிம்புவும் அனிருத்தும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.
“இனி மறைக்க ஒன்றுமில்லை.. சட்டத்தைச் சந்திப்பேன்..” என்றெல்லாம் முழங்கிய பீப் பாய் சிம்பு, இப்போது வீட்டிலேயே இல்லை. எங்கிருக்கிறார் என்ற தகவலும் இல்லை.
அதாவது தலைமறைவு வாழ்க்கை.
இன்று அவர் கோவை போலீஸ் முன்பு ஆஜராகியிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. ஒருபக்கம் வீராவேசமாக அறிக்கை விட்டுக் கொண்டே, மறுபக்கம் வக்கீல்கள் மூலம் முன்ஜாமீன், வாய்தா என அழுகுணி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் சிம்பு.மகளிர் அமைப்புக்கள் மட்டுமல்ல மொத்த தமிழகமே உண்மையில் கடும் கோபத்தில் தான் உள்ளது,
அவர் தந்தை டி ராஜேந்தர் தன் பங்குக்கு மகனைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். முதலில் மேலிடத்திடம்தான் அவர் முறையிடப் போயிருக்கிறார்.
இவர் வருகை ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்டுவிட்டதாம். உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி போலீசாருக்கும் உத்தரவாம். இது தெரியாமல், உடனடியாக போலீஸ் கமிஷனரைச் சந்திக்கப் போயிருக்கிறார் டிஆர்.
‘ஒழுங்கா உங்க பையனை வெளிய வந்து சரண்டராகச் சொல்லுங்க’ என்று கடுப்புடன் கூறிவிட்டாராம் கமிஷனர்.
விஷயம் அறிந்ததும் பீப் கவிஞர் எல்லாப் பழியையும் சிவபெருமான் தலையில் போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
அனிருத் கதை இன்னும் மோசம். கனடாவில் நடுக்கத்துடன் கச்சேரி பண்ணி முடித்த அவருக்கு, அங்கிருந்து தமிழ் நாட்டுப் பக்கம் வரும் ஐடியாவே இல்லையாம்.
‘தம்பி தயவு செஞ்சு வந்துடாதே…’ என இங்கிருந்து அவர் குடும்பத்தினர் போன் மேல் போன் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
தான் செய்வது தவறு என்பது தெரிந்தே ஆபாசத்தை பாட்டில் முழங்கிவிட்டு, இப்போது பக் பக் பயத்தோடு தலைமறைவாகியுள்ளனர் பீப் பிரதர்ஸ்! அப்படியே இருந்துடுங்க… வெளிய வந்துடாதீங்க என்கிறார்கள் கோடம்பாக்க நலம் விரும்பிகள்!!  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக