திங்கள், 14 டிசம்பர், 2015

காசுக்காக எந்த அளவும் கீழிறங்க....திரை உலகம் சிம்பு- அணிருத் அதன் வெளிப்பாடு,,,,,

தந்தி டிவியில் சிம்புவுக்கும் அனிருத்துக்கும் ஆதரவாக  ஹரிஹரன் என்ற பிரகிருதி  கருத்துக்களை   பொழிந்தார்,  சிம்பு  ராஜேந்தர் அனிருத்  போன்றோர் கொஞ்சம்  கூட நேர்மையோ  தைரியமோ  இல்லாமல்  ஒரு  பினாமியை  விவாதத்துக்கு  அனுப்பியுள்ளனர்.
அந்த பாட்டை   நானும் கேட்டேன். அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று அறிவதற்காக கேட்டேன், கண்றாவி ... இவ்வளவு தரம் தாழ்ந்த தமிழ் பாட்டு வாழ்நாளில் யாரும் கேட்டிருக்க  மாட்டார்கள். அவ்வளவு மோசம்.
பீப் சத்தத்தில் ஒளிந்திருக்கும் வார்த்தைகளை  எங்குமே யாராலும் சொல்லி காட்டவே முடியாத படு கேவலமான ஒரு வார்த்தையை  டி .ராஜேந்திரின்  தறுதலை புத்திரன் சிம்புவும் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் நெருங்கிய உறவினர் அணிருத்தும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர். அல்ல அல்ல .. விளம்பரத்திற்காக லீக் செய்துள்ளனர். அப்புறம் அனிருத் அதை தான் இசையமைக்க வில்லை என்று பின்வாங்குகிறார், சிம்புவோ சொந்த குரலில் பாடியதால் வேற வழியே இல்லாமல் கண்ணதாசன் இயற்றவில்லை வாலி இயற்றவில்லையா என்று புலம்புகிறார்,
நாக்கு அழுகிடும்..கண்ணதாசன் வாலி பெயர்களை உச்சரிக்க கூட தகுதில்லாத இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த படவேண்டியவர்கள்.
இவர்கள் மட்டும் அல்ல திரையில் பச்சை ஆபாசத்தையும் வன்முறையையும் விற்று வயிறு வளர்க்கும் அத்தனை  பெரிய நடிகர்களும் டைரக்டர்களும் கூட தண்டிக்க படவேண்டியவர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக