சனி, 5 டிசம்பர், 2015

ஒரு நடிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ‘ரோல் மாடல்’ நயன்தாரா.

நடிகை நயன்தாரா ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளதாக மலையாள டைரக்டர் சாஜன் கூறினார்.
முன்னணி கதாநாயகி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 பட உலகிலும் நயன்தாரா முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். காதல் சர்ச்சைகளில் சிக்கியபோதும் ‘மார்க்கெட்’ சரியவில்லை. சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான்’ படங்களின் தொடர்வெற்றியால் மார்க்கெட் அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது.
அவருடன் ஜோடியாக நடிக்க கதாநாயகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். தயாரிப்பாளர்களும் சம்பளத்தை உயர்த்தி கொடுக்க தயாராக இருக்கிறார்கள். நயன்தாரா ரூ. 3 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் பரவி உள்ளன. தென்னிந்திய பட உலகில் வேறு எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இல்லை.

நயன்தாராவின் வளர்ச்சி குறித்து பிரபல மலையாள டைரக்டர் ஏ.கே.சாஜன் அளித்த பேட்டி வருமாறு:–
ரோல் மாடல் ‘‘ஒரு நடிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ‘ரோல் மாடல்’ நயன்தாரா. நான் இயக்கும் ‘புதிய நியமம்’ என்ற மலையாள படத்தில் மம்முட்டி ஜோடியாக அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். படப்பிடிப்பு காலை 9 மணிக்கு தொடங்குவதாக இருந்தால், 30 நிமிடம் முன்னதாகவே வந்து விடுவார்.
படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனுக்குள் சென்று முடங்குவது இல்லை. படப்பிடிப்பு தளத்திலேயே உட்கார்ந்து படக்குழுவினருடன் பேசிக்கொண்டு இருப்பார். தலைக்கனம் அவருக்கு கிடையாது. எளிமையாக பழகுகிறார். தென்னிந்திய பட உலகில் நயன்தாரா ‘நம்பர் 1’ இடத்தில் இருப்பது மலையாள மக்களுக்கு பெருமை அளிப்பதாக உள்ளது.
சம்பளம் நயன்தாரா கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். குறைந்த சம்பளம் கொடுக்கும் மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவருக்கு கதையும் கதாபாத்திரமும்தான் முக்கியம். பணத்தை பெரிதாக நினைப்பது இல்லை. கதாபாத்திரம் பிடித்து இருந்தால் உடனே நடிக்க சம்மதித்து விடுவார். அப்படித்தான் எனது கதையும் அவருக்குப் பிடித்து போய் மலையாள படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு டைரக்டர் சாஜன் கூறினார்.
dailythanthi.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக