சனி, 5 டிசம்பர், 2015

அடையாறு வழிகளை அடைத்தால் வாழ முடியாது!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமின்றி, குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள, 50க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகளின், உபரி நீரை கடலுக்கு கடத்தி செல்லும் பெரும்பணியை அடையாறு ஆறு செய்கிறது. இந்த ஆற்றை ஆக்கிரமித்தாலோ, முறையாக பராமரிக்காமல் விட்டாலோ, சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்குவதை யாராலும் தடுக்க முடியாது. வடகிழக்கு பருவமழை, சென்னை நகருக்கு பெரும் பாடத்தை கற்று தந்துள்ளது. சென்னையின் மையப்பகுதியில் கூவம், அடையாறு ஆகிய இரண்டு ஆறுகள் மட்டுமே ஓடுகின்றன. விரிவாக்க பகுதியில் கொற்றலை ஆறு பயணிக்கிறது. இந்த ஆறுகளை தவிர்த்து, செயற்கையாக உருவாக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாய், மாநகராட்சியின் ஏழு மண்டலங்களில் பயணிக்கிறது. நீர்வழித்தடங்களில், பெரும்பாலான நீரை கடலுக்கு கடத்தும் பணியை அடையாறு ஆறு செய்கிறது. இந்த ஆற்றில், செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பால் மட்டுமே வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என்ற கருத்து உள்ளது. ஆனால், பெரிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதற்கு முன், 50க்கும் மேற்பட்ட சிறிய ஏரிகள் நிரம்பி, அதன் உபரிநீர் அடையாறு ஆற்றில் பல்வேறு, கிளை கால்வாய்கள் மூலம் இணைவது குறிப்பிடத்தக்கது.


இந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள, 96 ஏரிகளில், 50 ஏரிகளின் உபரிநீர், அடையாறு ஆற்றின் வழியாகத்தான் கடலுக்கு செல்கின்றன.



எந்தெந்த ஏரிகள்:
செம்பரம்பாக்கம், போரூர், திருநீர்மலை, எருமையூர், சோமங்கலம், நந்தம்பாக்கம், நடுவீரப்பட்டு, நல்லுார், மணிமங்கலம், பிள்ளைபாக்கம், ஸ்ரீபெரும்புதுார், மலைப்பட்டு, மண்ணிவாக்கம், வண்டலுார், முடிச்சூர், பெருங்களத்துார், இரும்புலியூர், ஊரப்பாக்கம், ஆதனுார், கூடுவாஞ்சேரி நந்திவரம், படப்பை, நாட்டரசன்பட்டு, காட்டாங்கொளத்துார், ஆத்தனஞ்சேரி, ஒரத்துார், சாலமங்கலம், வஞ்சுவாஞ்சேரி, வல்லம், மாகாண்யம், அழகூர், வைப்பூர், ஒரத்துார், சரப்பனஞ்சேரி, வடக்குபட்டு, சென்னாங்குப்பம், போந்துார், கண்ணந்தாங்கல், பால்நெல்லுார், மாம்பாக்கம், வெங்காடு, கொளத்துார், பூந்தண்டலம், பழந்தண்டலம்.



எந்தெந்த கிளை கால்வாய் இணைகிறது:
பாப்பான் கால்வாய்மண்ணிவாக்கம் கால்வாய்மணப்பாக்கம் கால்வாய்ராமாபுரம் கால்வாய்திருமுடிவாக்கம் இணைப்பு கால்வாய்
ஊரப்பாக்கம் இணைப்பு கால்வாய்ஒரத்துார் ஓடை  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக