செவ்வாய், 1 டிசம்பர், 2015

காங்கிரஸ் விஜயதரணி....இளங்கோவன் கலாட்டாவால் குஷ்பூவும் நக்மாவும் பின் தள்ளப்பட்டு விட்டாரகள்..

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை எப்படியாவது மாற்ற வேண்டும் என ஒரு சிலர் துடிக்கிறார்கள். அதனால் டெல்லிக்குப் படையெடுத்து வருகிறார்கள். சிதம்பரம் தலைமையில் மூத்த நிர்வாகிகள் சோனியா காந்தியிடம் புகார் அளித்தனர். அந்த டீமில் இடம்பெற்றிருந்த வசந்தகுமாரிடம் இருந்து மாநில வர்த்தகப் பிரிவுத் தலைவர் பதவியைப் பறித்தார் இளங்கோவன். இந்த நிலையில்தான் மகளிர் அணி தலைவி விஜயதரணி எம்.எல்.ஏ-வும் இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார். இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் சார்பில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரில் விஜயதரணியின் படம் பெரியதாகவும், இளங்கோவனின் படம் சிறியதாகவும் இருந்துள்ளன. இது இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த, பேனரைக் கிழித்து சத்தியமூர்த்தி பவனில் உள்ள, ‘ஆண்கள் கழிவறை’யில் வீசி இருக்கிறார்கள்.
இதை இளங்கோவனிடம், விஜயதரணி தட்டிக்கேட்டபோது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டதாம்!”
‘‘ஓஹோ!”
‘‘இருதரப்பும்  ஆவேசத்துடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். இதையடுத்து மகளிர் காங்கிரஸ் நிர்வாகி சாந்தா, போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பதிலுக்கு இளங்கோவன் தரப்பும் மகளிர் காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவரை வைத்தே விஜயதரணி மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். இதனையும் பதிவு செய்திருக்கிறது போலீஸ். இந்த நிலையில், விஜயதரணி டெல்லி சென்றுவிட்டார். அவருக்குப் பதிலடி தரும் வகையில் 61 மாவட்டத் தலைவர்களில் 49 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், அத்துமீறி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் விஜயதரணியை மகளிர் அணித் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ எனக் கோரியிருக்கிறார்கள். இது சோனியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இளங்கோவன் மாற்றப்படுவாரா என பட்டிமன்றம் நடக்கிறது. இதனை இளங்கோவனுக்கு எதிரான தலைவர்கள் அனைவரும் தூரத்தில் இருந்து ரசிக்கிறார்கள்’’ என்றபடியே எழுந்த கழுகார், ‘‘சென்னையில் மால்களில் இருக்கும் தியேட்டர்களுக்கு அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறார்களாம். புதியதாக முளைத்திருக்கும் அரசியல் தியேட்டர் ஓனர்களின் கைங்கர்யம்தான் என்று கடந்த இதழில் சொல்லியிருந்தேன் அல்லவா? மின்னல் வேகத்தில் ஒன்பது தியேட்டர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கிவிட்டனர். இன்னொரு நிறுவனத்துக்கும் மிக  விரைவில் அனுமதி வழங்க இருக்கிறார்களாம். தேர்தல் நேரம் அல்லவா?... வீண் சர்ச்சைகளை குறைத்து வருகிறார்கள் போலிருக்கிறது’’ என்றபடி பறந்தார்.

படங்கள்: ரா.ராம்குமார், தி.ஹரிஹரன்  விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக