திங்கள், 21 டிசம்பர், 2015

டெல்லியில் கார்களுக்கு கட்டுப்பாடு..மோடியிடம் ஆதரவு கோரும் கெஜிரிவால்

டெல்லியில் கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்தை அமல்ப்படுத்த மோடியிடம் ஆதரவு கேட்டுள்ளார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால். டெல்லியில் கடுமையான காற்று மாசுப்பாடு நிலவுகிறது. இதை குறைக்க பல்வேறு நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லி அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி ஒற்றைப்படை பதிவு எண்களை கொண்ட கார்களை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்க வேண்டும். அதேபோல் இரட்டைப்படை எண்களை கொண்ட கார்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து கார்களையும் இயக்கலாம்.


இந்த திட்டமானது ஜனவரி 1-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும், ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இத்திட்டம் கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்த ஆதரவளிக்கும்படி பிரதமர் மோடிக்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அருண் ஜெட்லி மீது ஊழல் புகார் கூறிவருவது உட்பட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்துவரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக