வியாழன், 31 டிசம்பர், 2015

அதிமுகவினரால் வெள்ளபெருக்கை மிஞ்சிய கட்டவுட் பெருக்கு....கடும் நெரிசல்

சென்னையைப் பாடாய்ப்படுத்திய வெள்ளத்தை விட மகா மோசமான கொடுமையை இன்று மக்களுக்குத் தந்து விட்டனர் அதிமுகவினர். அதிமுக பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் செய்த அட்டகாசத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பைச் சந்தித்தது. சென்னை திருவான்மியூரில் டாக்டர் வாசுதேவன் நகரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவன வளாகத்தில் இன்று அதிமுகவின் செயற்குழு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. admkgc இதனால் கடந்த 2 நாட்களாகவே தட்டி வைப்பது, பேனர் கட்டுவது என்று சாலைகளை மூடி விட்டனர் அதிமுகவினர். போயஸ் தோட்டம் முதல் கூட்டம் நடக்கும் இடம் வரை சாலைகளின் ஓரத்தில் பிளாட்பாரத்தை மறைக்கும் வகையில் தொடர்ந்து பேனர்களை வைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் சிரமத்தைக் கொடுத்து விட்டது. எங்குமே பிளாட்பாரத்தில் மக்களால் நடக்க முடியவில்லை. இந்த. நிலையில் இன்று காலை முதலே கிண்டியிலிருந்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களை திகைக்க வைத்து விட்டது. திருவான்மியூர் வரை வாகனங்கள் தேங்கிப் போய்க் கிடக்கின்றன. அதிமுக பேனர்கள் சாலையை அடைத்து நிற்பதால்தான் இத்தனை அக்கப்போரும். கிண்டி ஐஐடி முதல் அடையாறு மத்திய கைலாஷ் வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். அரசியல்வாதிகள் என்றுதான் திருந்தப் போகிறார்களோ!
/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக