புதன், 16 டிசம்பர், 2015

மலாலா: தீவிரவாதத்திற்கு முஸ்லீம் மக்ககளை குற்றம் சொல்ல கூடாது..நோபல் பரிசு பெற்ற..


இஸ்லாமாபாத் - தீவிரவாதத்திற்கு மக்கள் அனைத்து முஸ்லீம்களையும்
குற்றம் சொல்லகூடாது இது அதிக ஜிகாதிகளை தீவிரவாதிகள் தேர்வு செய்ய உதவியாக அமைகிறது என பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடி வரும் நோபல் பரிசு பெற்ற இளம் பெண் மலாலா யூசுப் கூறி உள்ளார்.  அரசியல்வாதிகள் எதையும் சிந்தித்து பேச வேண்டும் இதனால் தீவிரவாதிகள் தீவிரமடைய செய்யவே முடியும்.பாரீஸ் தீவிரவாத தாக்குதல் மற்றும் சான் பிரான்சிஸ்கோ துப்பாக்கி சூடு ஆகியவற்றிற்கு பிறகு  இஸ்லாமிய எதிர்ப்பு என இன்னும் அதை மோசமாக்கும் எனகூறி உள்ளார். நான் ஒரு விஷயத்தை முக்கியமாக கூறுகிறேன். தீவிரவாதத்திற்கு எதிராக நீங்கள் அனைத்து முஸ்லீம்களையும் பேச அது மேலும் அதிக தீவிரவாதிகளையே உருவாக்கும்.
உங்கள் எண்ணம் தீவிரவாதத்தை நிறுத்துவது என்றால் முஸ்லீம் மக்கள் அனைவரையும் குற்றம் சொல்லாதீர்கள். ஏன் என்றால் அது தீவிரவாதத்தை நிறுத்தாது எனகூறினார். மேலும்  சமீபத்தில் அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதை தடை செய்ய வேண்டும் என்ற டோனால்டு ட்ரம்பின் கருத்தையும் கடுமையாக விமர்சித்து உள்ளார். தினபூமி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக