ஞாயிறு, 13 டிசம்பர், 2015

தலைமை செயலர்; சேம்பரபாக்கம் ஏரியை திறக்க அனுமதிக்கு காத்திருக்க தேவை இல்லை!....அப்ப ஏன் காத்திருந்தாங்க?

செம்பரம்பாக்கத்தில் உபரி நீர் திறக்க அதிகாரி அனுமதிக்கு காத்திருக்க தேவையில்லை: தலைமைச் செயலாளர் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறக்க அதிகாரியின் அனுமதிக்கு காத்திருக்க தேவையில்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். மேலும், ஏரியை நிர்வகிப்பவரே நிலைமைக்கு ஏற்ப உபரி நீரை திறக்க முடிவு எடுக்கலாம். டிசம்பர் 1ஆம் தேதி ஏற்பட்ட சென்னை வெள்ளம் அரிதினும் அரிதான நிகழ்வு. டிசம்பர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு 10 ஆயிரம் கன அடி திறந்த நிலையில், 12 மணிக்கு 12,000 கன அடியாக உயர்ந்தப்பட்டது. டிசம்பர் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் பிற்பகல் 3 மணி வரை 29 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. 166 ஏரிகளில் இருந்தும் தண்ணீர் வரத்தால் அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பது பற்றி முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக