புதன், 2 டிசம்பர், 2015

வெள்ளம் - மக்கள் தியேட்டர்களில் தங்க மக்களுக்கு அனுமதி..வரலாறு காணாத....

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை தொடர்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிளில் மின்சார வினியோகம் தடைபட்டு சென்னை மாநகரம் இருளில் மூழ்கியது. வெள்ளத்தில் சிக்காமல் வீடுகளை விட்டு வெளியேறி தவிக்கும் மக்கள் தங்குவதற்காக ஆங்காங்கே உள்ள பிரபல திரையரங்கங்களும் திறந்துவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரலாறு காணாத வெள்ளத்தால் சிக்கித் தவிக்கிறது சென்னை மாநகரம், தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெள்ள நீர் பல அடி உயரத்திற்கு தேங்கியுள்ளது. ஏராளமான மக்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மின்சாரம் தடைபட்ட காரணத்தால் முன்னதாகவே வீடுகளை விட்டு வெளியேறினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புதிதாக 28 முகாம்கள் அமைக்கப்பட்டு அவற்றில் சுமார் 3,0000 பேர் அடைக்கலம் புகுந்தனர். ஆங்காங்கே உள்ள பிரபல திரையரங்கங்களும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு திறந்துவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை தொடர்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிளில் மின்சார வினியோகம் தடைபட்டு சென்னை மாநகரம் இருளில் மூழ்கியது. பிற்பகல் முதலே புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டது. மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு 8 மணிக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதுவரைக்கும் மின்சாரம் வழங்கப்படவில்லை. விடிய விடிய இருளில் தவித்தது சென்னை மாநகரம். தொடர் மழையால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. மதியம் நிறுத்தப்பட்ட மின் விநியோகம் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்ததால் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கிவிட்டது.

Read more at:amil.oneindia.com/n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக