சனி, 5 டிசம்பர், 2015

நடிகர் நடிகைகள் ரெஸ்க்யூ சென்னை குரூப்....வாட்சாப் ...வெள்ள பகுதிகளில்

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது படப்பிடிப்புகளை ரத்து செய்து உதவி செய்யும் பணியில் நடிகர்கள் கார்த்தி, விஷால் களமிறங்கி இருக்கின்றனர். சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கும் பணிகளில் நடிக,நடிகையர் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். Actors Vishal, Karthi Helps for Chenaai People இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் பணியில் தற்போது ஏராளமான நடிக, நடிகையர் கைகோர்த்து உள்ளனர். நடிக, நடிகையர் தமிழகம் மற்றும் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சித்தார்த், ஆர்ஜே பாலாஜி மற்றும் நடிகைகள் கனிகா, ஷாலினி அஜீத் ஆகியோர் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். 
மேலும் சமூக வலைதளங்கள் மூலமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் இவர்கள் செய்து வருகின்றனர். விஷால், கார்த்தி இந்நிலையில் விஷால் மதுரையில் நடந்த மருது படப்பிடிப்பை ரத்து செய்தும், கார்த்தி ஹைதராபாத்தில் நடந்த தோழா படப்பிடிப்பையும் நிறுத்தி விட்டும் சென்னை திரும்பினர். 
 
 ரெஸ்க்யூ சென்னை குரூப் இவர்கள் இருவரும் வாட்ஸ் ஆப்பில் 'ரெஸ்க்யூ சென்னை குரூப்' என்ற பெயரில் ஒரு குரூப்பை உருவாக்கினர்.இந்த குரூப்பில் நடிகர்கள் நாசர், எஸ்.வி.சேகர், ராஜேஷ், விக்ரம் பிரபு, அதர்வா, அருள் நிதி, பொன்வண்ணன், மனோபாலா, உதயநிதி, கருணாஸ், சாந்தனு, ஜூனியர் பாலையா, ரமணா, நந்தா, உதயா, ஸ்ரீமன், பூச்சிமுருகன், பாடகர் கிரிஷ், நடிகைகள் குஷ்பு, ரோகிணி, குட்டிபத்மினி, லலிதாகுமாரி, சோனா, கோவைசரளா, சங்கீதா உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் சேர்க்கப்பட்டனர். உணவு மற்றும் துணிமணிகள் இந்த குரூப்பின் மூலம் பால் பவுடர், துணிமணிகள், உணவு மற்றும் போர்வைகளை சேகரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து விநியோகம் செய்து வருகின்றனர்.
 
மேலும் திருப்பூர் நகரத்தில் இருந்தும் துணிகளை வரவழைத்து இவர்கள் உதவி செய்து வருகின்றனர். வடசென்னை விஷால் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வடசென்னை பகுதியிலும், கார்த்தி கே கே நகர் மற்றும் வேளச்சேரி பகுதிகளிலும் உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த உதவிப் பணியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ரசிகர் மன்றங்களில் இருப்பவர்களும் கைகோர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: ://tamil.filmibeat.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக